தெலங்கானா மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு 36 ஆனது

By என்.மகேஷ்குமார்

தெலங்கானாவில் கரோனா வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது.

லண்டன், குவைத்மற்றும் துபாயில் இருந்து திரும்பிய 3 பேருக்கு நேற்று கரோனாவைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் இம்மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்தது. பாதிக்கப்பட்டோர் செகந்திராபாத் காந்தி அரசு மருத்துவமனையில் தனி சிகிச்சை வார்டில் சிகிச்சை பெற்று வருகிறனர்.

தெலங்கானாவில் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஆங்கிலேயர் கால தொற்று நோய் சட்டத்தை மாநில அரசுஅமல்படுத்தியுள்ளது. பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேவர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனால் 90 சதவீத மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். அரசு, தனியார்பஸ்கள், வாடகை கார்கள், ஆட்டோக்கள் நேற்று 3-வது நாளாகஇயங்கவில்லை. பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், தனியார்அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்களில் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

ஆந்திராவில் தேர்வுகள் ரத்து

கரோனா அச்சுறுத்தல் காரண மாக ஆந்திர மாநிலத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்