தஞ்சை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர். பாலுவின் சாதனைகள் குறித்த புத்தகத்தை அஞ்சல் முத்திரை இல்லாமல் வீடு வீடாக சென்று ஞாயிற்றுக்கிழமை வழங்கிய தபால்காரரை பொதுமக்கள் பிடித்து வருவாய் கோட்டாட்சிய ரிடம் ஒப்படைத்தனர்.
டி.ஆர். பாலு செய்த பணிகள் குறித்து அச்சிடப்பட்ட 32 பக்க புத்தகம் உள்ள கவர்களை, கீழவஸ்தாசாவடி அஞ்சல் நிலைய அஞ்சல்காரர் பழனிநாதன், வீடு வீடாகச் சென்று வழங்கி கொண்டிருந்தார்.
அஞ்சல் தலை ஒட்டப்பட்டு, முத்திரை குத்தாமல் இருந்த கவரை விடுமுறை நாளில் தபால் காரர் வழங்கியதால் பொதுமக்கள் சந்தேகம் அடைந்தனர்.
உடனடியாக அவரை பிடித்து வைத்த அப்பகுதி மக்கள், மாவட்ட தேர்தல் பிரிவுக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த வருவாய் கோட்டாட்சியர் தேவதாஸ்போஸிடம், தபால்காரர் பழனிநாதனை பொதுமக்கள் ஒப் படைத்தனர். அவரிடம் விசா ரணை நடத்தப்பட்டு வருகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
38 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago