உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டிய தரத்தில் மருத்துவர்களுக்கான கவச உடைகள் இல்லை: தினகரன் கவலை

By செய்திப்பிரிவு

மருத்துவர்களுக்கு சரியான கவச உடைகளை வழங்க வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் இதுவரை 12 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இவர்களுக்கு அரசு மருத்துவர்கள் இரவு, பகல் பாராமல் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டிருக்கிற கவச உடைகள் உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டிய தரத்தில் இல்லை என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (மார்ச் 24) தன் ட்விட்டர் பக்கத்தில், "கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தன்னலம் பாராது பணிபுரிந்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோரின் சேவை மகத்தானது. மிகுந்த நன்றிக்குரியது. அவர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.

ஆனால், மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டிருக்கிற கவச உடைகள் உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டிய தரத்தில் இல்லை என்று வெளியாகும் தகவல்கள் கவலை அளிக்கின்றன.

அரசு இதனை உடனடியாக கவனத்தில் கொண்டு சரியான கவச உடைகளை வழங்குவதுடன் தேவையான மருத்துவ உபகரணங்கள் அனைத்தையும் தயார் நிலையில் வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என தினகரன் பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

41 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்