இந்தோனேஷியாவைச் சேர்ந்த 11 பேர் உட்பட சேலத்தில் 16 பேரை தனிமைப்படுத்தி சிகிச்சை

By செய்திப்பிரிவு

இந்தோனேஷியாவில் இருந்து சேலம் வந்த 11 பேர் உள்ளிட்ட 16 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தோனேஷியாவில் இருந்து 11 பேர் கொண்ட குழுவினர் கடந்த 10-ம் தேதி சேலம் வந்துள்ளனர். இவர்கள் சேலம் கிச்சிப்பாளையம், எருமாபாளையம் பகுதிகளில் உள்ள மசூதிகளில் மத பிரசங்கம் செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகம் சேலம் அரசு மருத்துவமனைக்கு தெரிவித்தனர்.

இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு மருத்துவமனை டீன் பாலாஜி நாதன் தலைமையிலான குழுவினர், காவல்துறையினர் உதவியுடன், இந்தோனேஷியாவைச் சேர்ந்த 11 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த உள்ளூரைச் சேர்ந்த 5 பேரையும் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து, தனி வார்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தனர். அவர்கள் 16 பேருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து, ரத்தம் மற்றும் சளி உள்ளிட்டவற்றின் மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து சேலம் அரசு மருத்துவமனை டீன் பாலாஜி நாதன் கூறியதாவது: இந்தோனேஷியாவைச் சேர்ந்த 11 பேர் கடந்த 10-ம் தேதி சேலம் வந்துள்ளனர். இவர்கள் கிச்சிப்பாளையம், எருமாபாளையம் பகுதியில் உள்ள மசூதிகளில் மத பிரசங்கம் செய்து வந்துள்ளனர். இவர்கள் 11 பேர் மற்றும் இவர்களுடன் தொடர்பில் இருந்த 5 பேரையும், சேலம் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 4 பேருக்கு வறட்டு இருமல் உள்ளது. மற்றவர்களின் உடல்நிலை சாதாரணமானதாக இருப்பதுடன், வழக்கமான உணவுகளை எடுத்துக் கொள்கின்றனர். பரிசோதனை முடிவு இன்னும் கிடைக்கவில்லை.

கரோனா பாதிப்பு இல்லை என முடிவில் தெரியவந்தாலும், 16 பேரையும் 28 நாட்களுக்கு தனிமைப்படுத்தி, மருத்துவக் குழுவினர் மூலம் தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருக்கும் வார்டில் மருத்துவர், செவிலியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்