144 தடையுத்தரவை மீறினால் நடவடிக்கை : கோவை  காவல் ஆணையர் அறிவிப்பு 

By டி.ஜி.ரகுபதி

கரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து 144 தடையுத்தரவு அமல்படுத்துவது தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறும்போது,‘ மாநகரில் நாளை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல்துறையினர் மூலம் பொதுமக்களிடம் 144 தடையுத்தரவு தொடர்பான எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்படும். பொதுமக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியில் வரக் கூடாது. 5 அல்லது அதற்கு மேலாக நபர்கள் ஒன்றாக சேர்ந்து சாலைகளில் சுற்றக் கூடாது. இவ்வாறு சுற்றினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்படும்.

மேலும், 5 அல்லது 5 பேருக்கு மேல் ஒன்றாக கூடினால், முதலில் எச்சரிக்கை செய்யப்படுவர். அதை மீறி திரும்ப அதே செயலில் ஈடுபட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி வழக்குப்பதிந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தவிர, 1,500 போலீஸார் மாநகரில் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காலை முதல் இரவு வரை 750 பேரும், இரவு முதல் அதிகாலை வரை 750 பேர் என இவர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவர்,’’ என்றார்.

இதேபோல், மாவட்ட காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்