திருவண்ணாமலையில் வாழ்ந்த பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியின் வாழ்க்கை வரலாற்றை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் ‘தி இந்து’ குழுமம் சார்பில் ‘நான் யார்..?’ (WHO AM I?) பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி 1879-1950 என்ற ஆங்கில நூல் வெளியிடப்பட்டுள்ளது.
பக்தர்களால் ‘பகவான்’ என்றும் ‘மகரிஷி’ என்றும் அன்போடு போற்றப்படும் ரமணர், மதுரையை அடுத்த திருச்சுழியில் வாழ்ந்த சுந்தரம் அய்யர் – அழகம்மை தம்பதியினருக்கு மகனாகத் தோன்றியதில் இருந்து அவரது வாழ்க்கை சம்பவங்கள், நிகழ்த்திய அற்புதங்கள், மனிதர்கள் மட்டுமல்லாது பசு, மயில், அணில் என்று விலங்குகளின் மீது அவர் காட்டிய அன்பு குறித்து இந்நூல் விளக்குகிறது.
மேலும் அவரது சேவை, அர்ப்பணிப்பு உணர்வு, கேரள சமூக ஆர்வலர் நாராயண குருவுடன் ஏற்பட்ட புனித நட்பு, வாழ்க்கை, சிந்தனை, அண்ணாமலையார் கோயில் தரிசனத்தின் முக்கியத்துவம், சுவர் ஓவியங்கள் மூலம் அறியப்பட்ட கதைகள், சேவகர்கள் ஆசிரமத்தால் எவ்வாறு ஈர்க்கப்பட்டார்கள் போன்ற தகவல்களையும் இந்நூல் கொண்டுள்ளது.
இதுவரை வெளியுலகம் காணாத அவரது நிழற்படங்களும், கடைசியாக எடுத்த வண்ணப் படமும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
‘தி இந்து’ குழும பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ள இந்நூலின் கருத்துருவாக்கத்தை டி.எஸ்.சுப்ரமணியன் செய்துள்ளார். திருவண்ணாமலை ஸ்ரீ ரமணர் ஆசிரமத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் திருவண்ணாமலை ரமண மகரிஷி ஆசிரம தலைவர் வி.எஸ்.ரமணன், சுசிலா ரமணன், நிர்வாக அலுவலர் வி.சுப்ரமணியன், கணக்குப் பிரிவு நிர்வாகி சிவதாஸ் கிருஷ்ணன், ஆசிரம நிர்வாக மேலாளர் கே.எஸ்.கண்ணன், புகைப்பட நிபுணர் தேவ் கோகாய் ஆகியோர் பங்கேற்றனர்.
நூல் வெளியீட்டின்போது ‘தி இந்து’ விற்பனை மற்றும் விநியோகத் துறை துணைத் தலைவர் கே.ஸ்ரீதர் அர்னாலா உடனிருந்தார். இந்த நூலின் விலை ரூ.399. தற்போது 20 சதவீத சலுகை விலையில் வழங்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago