சென்னை முழுவதும் வீடு வீடாகச் சென்று யாருக்கேனும் சளி, இருமல், காய்ச்சல் இருக்கிறதா என்று கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாக மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள மழைநீர் வடிகால்களில் தூர் வாருவதற்காக மாநகராட்சி சார்பில் 5 நவீன இயந்திர வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களில் உள்ள, நீர் பீய்ச்சி அடிக்கும் கருவி மூலமாக கிருமிநாசினி மருந்தை உயரமான கட்டிடங்கள் மீது தெளிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதேபோல, கழிவுநீர் குழாய்களில் ஏற்படும் அடைப்பை சரிசெய்ய, நீர் பீய்ச்சும் ஜெட்ராடிங் இயந்திரத்தை சென்னை குடிநீர் வாரியம் பயன்படுத்துகிறது. அந்த இயந்திரத்தைக் கொண்டும், சென்னையில் பல்வேறு பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த 75 ஜெட்ராடிங் வாகனங்களை, சுகாதாரத் துறையின் கிருமிநாசினி தெளிப்பு நடவடிக்கைக்கு வழங்கும் நிகழ்ச்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் பங்கேற்று, வாகனங்களை சுகாதாரத் துறையிடம் வழங்கினார்.
3,000 பணியாளர்கள்
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளிக்க பவர் ஸ்பிரேயர் உட்பட 500 நவீன இயந்திரங்கள், அவற்றை இயக்குவதற்கான 3 ஆயிரம் பணியாளர்கள் ஏற்கெனவே அந்தந்த வார்டுகளுக்கு அனுப்பட்டுள்ளனர்.
அரசு அலுவலகங்கள் உட்பட பெரிய கட்டிடங்களில் கிருமிநாசினி தெளிக்க ஏதுவாக, ஒரு மண்டலத்துக்கு தலா 5 வாகனங்கள் என அதிக சக்தியுடன் கூடிய 75 ஜெட்ராடிங் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
வீடுகளில் கொசுப் புழுக்களை ஆய்வு செய்யும் பணியாளர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று யாருக்கேனும் சளி, இருமல், காய்ச்சல் இருக்கிறதா என்று கணக்கெடுக்கும் பணி மாநகராட்சி சார்பில் தீவிரமாக நடந்து வருகிறது.
அவ்வாறு யாரும் இருப்பது கண்டறியப்பட்டால், கணக்கெடுப்பவர்கள் அதுபற்றிய விவரங்களை மண்டல சுகாதார அலுவலர்களிடம் தெரிவிப்பார்கள். அவர்கள் உரிய பரிசோதனை செய்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.
அம்மா உணவகம் இயங்கும்
இன்று மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அதன்படி, மக்கள் சுயக் கட்டுப்பாட்டுடன் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். மாநகராட்சி நடத்திவரும் 407 அம்மா உணவகங்களும் வழக்கம்போல இயங்கும். மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடற்றவர்கள் மாநகராட்சியின் 53 காப்பகங்களில் தங்கி பயன்பெறலாம். இவர்களுக்கு உணவு வழங்க மாநகராட்சி சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. தேவைப்பட்டால், வீடற்றவர்களை தங்கவைக்க மாநகராட்சியின் 156 சமுதாயக் கூடங்கள் தயார்நிலையில் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி இணை ஆணையர் (சுகாதாரம்) ப.மதுசூதன் ரெட்டி, துணை ஆணையர் (பணிகள்) பி.குமாரவேல் பாண்டியன், தலைமைப் பொறியாளர் எஸ்.ராஜேந்திரன், மேற்பார்வை பொறியாளர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சென்னை குடிநீர் வாரிய மேற்பார்வை பொறி யாளர் ராமசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago