கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், பாதுகாப்புமுன்னெச்சரிக்கை நடவடிக்கை களையொட்டி திருவள்ளூர் மாவட் டத்தில் பழவேற்காடு உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களும், ஆந்திர மாநில எல்லையில் உள்ள சாலைகளும் மூடப்பட்டுள்ளன.
கரோனா வைரஸ் பரவுவதைத்தடுக்கும் வகையில், பாதுகாப்புமுன்னெச்சரிக்கை நடவடிக்கை களை திருவள்ளூர் மாவட்ட நிவாகம் செயல்படுத்தி வருகிறது. இதையொட்டி, திருவள்ளூர் மாவட்டம், கீழச்சேரி கிராமம், கோவிந்தம்மேட்டில் உள்ள முதி யோர் இல்லத்துக்கு நேற்று ஆட்சியர் மகேஸ்வரி ஆய்வு செய்யச்சென்றார். அப்போது, அங்கிருந்தஇல்லவாசிகளுக்கு சோப்புக் கரைசல் கொண்டு கை கழுவிக் காட்டினார்.
வழிபாட்டுத் தலங்கள் மூடல்
பொதுமக்கள் அதிகம் கூடு வதைத் தடுக்கும் வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய வழிபாட்டுத் தலங்களான திருத்தணி முருகன் கோயில், பெரியபாளையம் பவானி அம்மன், சிறுவாபுரி முருகன் கோயில், திருவேற்காடு கருமாரியம்மன் கோயில்உள்ளிட்ட 73-க்கும் மேற்பட்ட கோயில்கள் ஏற்கெனவே மூடப் பட்டுள்ளன.
இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலமானபழவேற்காட்டில் உள்ள கலங்கரை விளக்கத்தை பார்வையிட பொதுமக்கள் மற்றும் சுற்றுலாபயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், அங்குள்ள ஏரி உள்ளிட்ட இடங்களுக்கும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள மற்ற சுற்றுலா தலங்களும் அரசின்மறு உத்தரவு வரும்வரை மூடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்துக்கு தடை
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆந்திர மாநில எல்லையை இணைக்கும் சாலைகளான பள்ளிப்பட்டு, குமாரமங்களம், தளவாய்ப்பட்டு, கோரகுப்பம், கள்ளடப்பேட்டை, ஆர்.கே பேட்டை, ஜனகராஜகுப்பம், விடியங்காடு (அம்மையார் குப்பம்), திருத்தணி பொன்பாடி, கனகம்மா சத்திரம், ஊத்துக்கோட்டை, பென்னாலூர்பேட்டை, கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம், பொம்மாஞ்சிபுரம் (கவரப்பேட்டை) ஆகிய பகுதிகளில் போக்குவரத்துகளுக்கு தடைவிதித்து நேற்று முதல் வரும் 31-ம்தேதிவரை மூடப்படுகின்றன.
எனினும், அடிப்படையாகத் தேவைப்படும் பால், பெட்ரோல், டீசல், காய்கறி, மருந்து, கேஸ்சிலிண்டர் ஏற்றிவரும் வாகனங்கள், ஆம்புலன்ஸ், இதர சரக்கு வாகனங்கள், தவிர்க்கஇயலாத காரணங் களுக்கு பயன்படுத்தப்படும் இலகு ரக வாகனங்கள், பொது மக்களின் அவசிய நகர்வுக்கு மட்டும் குறைந்த அளவில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் ஆகியவை மட்டும் அனுமதிக்கப்படும்.
எனினும், இவற்றில் வருவோர் நோய்த்தடுப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். வாகனங்களும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும். இதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்குமாறு ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago