கடலூர் மாவட்டம் மலையனூரில் 3 சிறுமிகள் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மணிகண்டன் - ஸ்டெல்லா தம்பதியருக்கு 3 மகள்கள் உள்ளனர். மணிகண்டன் பெங்களூருவில் பெட்ரோல் பங்கில் பணியாற்றி வருகிறார். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த மலையனூர் கிராமத்தில் உள்ள தனது உறவினரின் பிறந்தநாள் நிகழ்ச் சிக்கு தனது மனைவி ஸ்டெல்லா மற்றும் மகள்கள் சுவேதா(13), நிவேதா(10) மற்றும் சுஜாதா (8) ஆகியோரை அனுப்பி வைத்துள்ளார். 3 மகள்களும் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் பள்ளியில் முறையே 8, 5, 3-ம் வகுப்பு படித்து வந்தனர்.
நிகழ்ச்சிகள் முடிந்த நிலையில் நேற்று மலையனூர் கிராமத்தின் அருகே உள்ள கிணற்றில் துணி துவைப்பதற்காக தனது மூன்று மகள்களையும் ஸ்டெல்லா அழைத்துச் சென்றார். அங்கு துணி துவைத்துக் கொண்டிருந்தபோது, கிணற்றின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த 3 சிறுமிகளும் எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்து இறந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago