கரோனா வைரஸ் அச்சம் காரணமாக பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததால், வெளியூர் செல்லும்50 சதவீத அரசு விரைவு பேருந்துகள் நிறுத்தப்பட்டுஉள்ளன. இது தொடர் பாக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மக்கள் கூட்டமாகச் செல் வதை தவிர்க்கவும், தேவையற்ற பயணங்களை தள்ளிவைக்கவும் வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதனால், வெளியூர் பயணத்தை மக்கள் தவிர்த்து வருகின்றனர். குறிப்பாக, நீண்ட தூரம் பயணம் செய்வதை அதிக அளவில் மக்கள் தவிர்த் துள்ளனர்.
பயணிகளின் வருகை குறைந்துள்ளதால், பெங்களூரு, திருப்பதி,திருவனந்தபுரம் மற்றும் தென்மாவட்டங்களுக்குச் செல்லும் விரைவு பேருந்துகள் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன.
மருத்துவ பரிசோதனை
கோயம்பேடு, தாம்பரம், திருச்சி, மதுரை, கோவை உள் ளிட்ட முக்கியமான பேருந்து நிலையங்களில் ‘இன்ஃப்ராரெட் தொ்மோ மீட்டா்’ எனும் கருவி மூலம் சோதனை செய்த பிறகே பேருந்துகளில் பயணம் செய்ய மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago