காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட கோயில்களில் ஆகமவிதிப்படி பூஜை உண்டு; பக்தர்களுக்கு அனுமதி இல்லை- கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

தமிழகத்தில் கரோனா வைரஸ்தடுப்பு நடவடிக்கையாக அனைத்துவழிபாட்டுத் தலங்களிலும் வரும் 31-ம் தேதிவரை பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, கோயில் நகரம் எனக் கருதப்படும் காஞ்சிபுரத்தில் உள்ளஉலகப் புகழ் பெற்ற வரதராஜப்பெருமாள் கோயில், காமாட்சியம்மன், ஏகாம்பரநாதர் உள்ளிட்டஅனைத்து பெரிய கோயில்களிலும் மேற்கண்ட தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி கிடையாது எனக்கூறி, ராஜகோபுர கதவுகள் மூடப்பட்டுள்ளன.

இதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் கந்தசுவாமி, திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர், மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாள் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில், திருத்தணி முருகன் கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன், பெரியபாளையம் பவானியம்மன் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களும் மூடபட்டுள்ளன.

இக்கோயில்களுக்குள் உள்ளே பக்தர்களுக்கு மட்டும்தான் அனுமதி இல்லை என்றும், ஆகமவிதிகளின் படி வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும் என்றும் அறநிலையத் துறை சார்பில் கோயில்களின் முகப்பு பகுதிகளில் அறிவிப்பு பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், வெளியூரில் இருந்து வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதை காணமுடிந்தது.

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனாவைரஸ் தடுப்புப் பிரிவு வார்டைஆட்சியர் பொன்னையா நேற்று ஆய்வு செய்தார். மேலும், மருத்துவமனையின் உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகள் பிரிவில் செய்யப்பட்டுள்ள முன் னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து, பேருந்து நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை சார்பில் பொது மக்களுக்கு கைகளை சுத்தம் செய்துகொள் ளும் முறை குறித்து விழிப்புணர்வுசெயல்பாடுகளைப் பார்வையிட் டார். இதேபோல், உத்திரமேரூர் பகுதியிலும் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்றன.

உடல்வெப்ப பரிசோதனை

கல்பாக்கத்தில் அணுமின் நிலைய ஊழியர்கள் வசிக்கும்நகரியப் பகுதியின் நுழைவுவாயிலில் கண்காணிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, நகருக்குள் வரும் நபர்களின் உடல் வெப்பத்தை ஊடுகதிர் பரிசோதனை (தெர்மல் ஸ்கேனிங்) செய்த பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கிருமி நாசினி தெளித்தல், கை கழுவும் முறை என, கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன.

பசுமைப் பூங்கா மூடல்

குறிப்பாக நேற்று ஆவடி மாநகராட்சி பகுதிகளில் இளைஞர்கள், பயிற்சி செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் என, 120 பேர் அடங் கிய 6 குழுவினர் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குச் சென்று, விழிப்புணர்வு நடவடிக் கைகளில் ஈடுபட்டனர். மேலும்,கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆவடி மாநகராட்சிப் பகுதியில் உள்ள பருத்திப்பட்டு ஏரி மற்றும்பசுமைப் பூங்கா உள்ளிட்ட வற்றை மாநகராட்சி நிர்வாகம் மூடியுள்ளது.

திரூர் வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் நெல் ஆராய்ச்சிமையம் சார்பில், வேளாண்மை அறிவியல் நிலைய வளாகத்தில், பண்ணை தொழிலாளர்களுக்கு கரோனா தடுப்பு நடவடிக்கையாக கை கழுவும் முறையின் செயல் விளக்கம் அளிக்கப்பட்டு, தொழி லாளர்களுக்கு சோப்பு கட்டிகள் வழங்கப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE