ஈரானில் சிக்கியுள்ள மீனவர்கள் மற்றும் பிலிப்பைன்சில் உள்ள தமிழக மாணவர்களுக்கு உணவு, மருத்துவ வசதி வழங்கப்படு வதாகவும், அவர்களை விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளதாகவும் பேரவையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் திமுக உறுப் பினர் ஆஸ்டின், காங்கிரஸ் உறுப் பினர் பிரின்ஸ் மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சி உறுப்பினர் தமிமுன் அன்சாரி ஆகியோர், ஈரானில் சிக்கியுள்ள மீனவர்கள், பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசி யாவில் சிக்கியுள்ள மருத்துவ மாணவர்களை மீட்டு தமிழகம் கொண்டுவர வேண்டும் அல்லது அவர்களுக்கு பாதுகாப்பான தங்கு மிடம் மற்றும் உணவு அளிக்க வேண்டும். இதற்கு மத்திய வெளி யுறவுத் துறை அமைச்சகத்துடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணி லாவில் இந்திய மாணவர்கள் தவித்து வருவதாக உறுப்பினர்கள் கூறியிருப்பதைப் போல், சமூக வலைதளங்களிலும் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. கரோனா வைரஸ் பாதிப்பைத் தொடர்ந்து இந்திய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
முதல்வர் வலியுறுத்தல்
பிலிப்பைன்சில் உள்ள மணி லாவில் இந்திய மாணவர்களுக்கு தேவையான உணவு வழங்கவும், அவர்களை தமிழகத்துக்கு கொண்டுவர, மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்ற தோடு வெளியுறவுத் துறை அமைச் சகம் மற்றும் இந்திய தூதரகத்தை யும் முதல்வர் தொடர்ந்து வலி யுறுத்தி வருகிறார்.
மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள 200 மாணவர்களை அழைத்து வருவதற்கு கடந்த 17-ம் தேதி தமிழக அதிகாரிகள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள், வெளியுறவுத் துறை அதிகாரிகள் வாயிலாக கோலாலம்பூரில் சிக்கித் தவித்த 170 மாணவர்கள் விசாகப்பட் டினத்துக்கு அழைத்து வரப்பட்டுள் ளனர். முதல்வர் எடுத்த துரித நடவடிக்கைகளுக்கு இது சான் றாகும்.
அதேபோல் ஈரானில் கிஷ், சிசுரோ உள்ளிட்ட பல்வேறு துறை முகங்களில் சிக்கியுள்ள 2 ஆயிரம் இந்தியர்களில் 659 தமிழக மீனவர் களை மீட்க முதல்வர், கடிதம் அனுப் பினார். மேலும், வெளியுறவுத் துறை அமைச்சரை மாநிலங்களவை உறுப்பினர்கள் நேரில் சந்தித்து அழுத்தம் கொடுத்துள்ளனர்.
தமிழகம் உள்ளிட்ட மாநி லங்களைச் சேர்ந்த மீனவர்கள் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. மார்ச் 10-ம் தேதி முதல் விமானம் வாயிலாக மீட்புப் பணிகள் தொடங்கியுள்ளன. இவ் வாறு அமைச்சர் ஆர்.பி.உதய குமார் தெரிவித்தார்.மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரக அதி காரிகள், வெளியுறவுத் துறை அதிகாரிகள் வாயிலாக கோலாலம்பூரில் சிக்கித் தவித்த 170 மாணவர்கள் விசாகப் பட்டினத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
12 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago