விழுப்புரம் (தனி) மக்களவை தொகுதியில் வரும் மக்களவைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட உள்ளதாக திருநங்கை கல்கி தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியைச் சேர்ந்த கல்கி தற்போது புதுவை அடுத்த கோட்டக் கரையில் வசித்து வருகிறார். எம்.ஏ. இதழியல், எம்.ஏ. சர்வதேச உறவு களில் பட்டம் பெற்றுள்ள இவர் சமூகப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். வானூர் தாலுகா, கோட்டக்கரையில் கைவினைப் பொருட்கள் தயாரிக் கும் நிறுவனத்தில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.
திருநங்கைகள் வாழ்க்கை நிலை தொடர்பான புத்தகங்களை எழுதி யுள்ள கல்கி, 2010-ம் ஆண்டு அமெரிக்க அரசின் விருந்தினராக அழைக்கப்பட்டு அந்நாட்டுக்கு சென்று வந்தார். அதே போல் இந்திய குடியரசுத் தலைவர் சமூகப்பணிகளுக்காக இவரை கௌரவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் போட்டி யிடுவது குறித்து அவர் கூறிய தாவது:
சமூகத்தில் திருநங்கைகள் படும் துன்பங்கள், பெண்களுக்கு நிலவும் பிரச்சினைகள் குறித்து முழுமை யாக அறிந்துள்ளேன். அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட் டால் சிறந்த வாய்ப்பாக இருக்கும்.
எனக்கு இந்தி, தமிழ், ஆங்கிலம், மலையாளம் மொழிகள் தெரியும். விழுப்புரம் மக்களவை தொகுதி மிகவும் பின்தங்கிய தொகுதியாக உள்ளது.
தொழில் வளர்ச்சியோ, கல்வி வளர்ச்சியோ இல்லாமல் உள்ளது. மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டால் விழுப்புரம் தொகுதியை முன்னேற்றுவதற்கு முயற்சி எடுப்பேன். நான் எந்த அரசியல் கட்சியிலும் சேரவில்லை. மக்கள், பெண்கள், இளைஞர்களை நம்பி தான் தேர்தலில் நிற்கிறேன் என்று கல்கி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago