ஆண்டிபட்டி அருகே மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்ததால் எருக்கம்பால் ஊற்றி கொலை செய்த வழக்கில் குழந்தையின் தாய் மற்றும் பாட்டி கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தையின் சடலத்தை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே மொட்டனுத்து ஊராட்சியில் உள்ள ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (34). இவரது மனைவி கவிதா (27). இந்தத் தம்பதிகளுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு 10 வயது மற்றும் 8 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி மேலும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.
இதனையடுத்து மூன்றாவதாக பிறந்த அந்த பெண் குழந்தை கடந்த மார்ச் 2-ம் தேதி அன்று இறந்துள்ளது. அந்த குழந்தையை பெற்றோர்கள் வீட்டின் அருகேயே அடக்கம் செய்துள்ளனர்.
» 26 கிராமங்களை அழித்து புதிய சுரங்கம் அமைக்கும் திட்டத்தை என்எல்சி நிறுவனம் கைவிட வேண்டும்: தினகரன்
இது குறித்து சந்தேகம் அடைந்த கிராம மக்கள் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் புகார் செய்தனர். இதனையடுத்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.
மேலும் ஆண்டிபட்டி தாசில்தாரிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து ராஜதானி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து போலீஸார் விசாரணை செய்தனர்.
இறந்த குழந்தையின் தாய் கவிதா, மாமியார் செல்லம்மாள் ஆகியோரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்.
இதனையடுத்து சந்தேகமடைந்த போலீஸார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் இருவரும் குழந்தைகள் எருக்கம் பால் கொடுத்து கொலை செய்து புதைத்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த ராஜதானி போலீஸார், அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலைத் தோண்டிஎடுத்து பிரேதப்பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் ஆண்டிபட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை செக்கானூரணி, உசிலம்பட்டியில் நடந்த பெண் சிசுக் கொலைகளைத் தொடர்ந்து மூன்றாவதாக மற்றுமொரு சம்பவம் நடந்திருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
12 mins ago
தமிழகம்
15 mins ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago