சிபிஎஸ்இ தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டதுபோல் தமிழகத்தில் பிளஸ் 2, 10-ம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும். அதேபோன்று 9-ம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி என்று உத்தரவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் சீனாவைத் தொடர்ந்து இந்தியா உட்பட 160 நாடுகளில் பரவியுள்ளது. இதுவரை வைரஸால் 2.03 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலின் தீவிரத்தால் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் 150-க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 3 பேர் இறந்துள்ளனர். வைரஸ் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என்று உ.பி. அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் சிபிஎஸ்இ சார்பில் நடத்தப்பட்டு வந்த பொதுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
» 3 வார ஊரடங்கு உத்தரவு ஒன்றே கரோனா தடுப்புக்கு ஒரே தீர்வு: அன்புமணி வலியுறுத்தல்
» ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்தால் 100% பணம் ரிட்டர்ன்: ரயில்வே துறை அறிவிப்பு
இந்த சூழலில் தமிழகத்தில் பிளஸ் 2, 10-ம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும். 9-ம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி என்று உத்தரவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவு:
“கரோனா அச்சுறுத்தலால் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலும் மாணவர் நலன் கருதி, இப்போது நடைபெறும் 11,12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளையும், 27 ஆம் தேதி தொடங்கும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வையும் ஒத்திவைக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான தேர்வுகளை ரத்து செய்து, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை கோடைக்காலம் வரை நீட்டித்து அடுத்த கல்வியாண்டில் திறக்க வேண்டும்”.
இவ்வாறு ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago