இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக பொதுமக்கள் பயணங்களைத் தவிர்க்க அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டுகளை பொதுமக்கள் ரத்து செய்து வருகின்றனர். இந்நிலையில் முன்பதிவை ரத்து செய்யும் பயணிகளுக்கு 100% கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் சீனாவைத் தொடர்ந்து இந்தியா உட்பட 160 நாடுகளில் பரவியுள்ளது. இதுவரை வைரஸால் 2.03 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலின் தீவிரத்தால் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் 150-க்கும் மேற்பட் டோர் இந்த நோயால் பாதிக்கப்பட் டுள்ளனர். அதில், 3 பேர் இறந்துள்ள னர். வைரஸ் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.
கரோனா தொற்றைத் தவிர்க்க நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதவிர பொதுமக்கள் கூடும் இடங்களைத் தவிர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. பயணங்களைத் தவிர்க்கவும், சுற்றுலாப் பயணங்களை ரத்து செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் அதிக அளவில் தங்கள் பயணங்களை ரத்து செய்து வருகின்றனர். இதனால் பயணிகள் எண்ணிக்கை 80% வரை குறைந்துவிட்டது. நேற்று நாடு முழுவதும் பல்வேறு ரயில் சேவைகளை ரயில்வே நிர்வாகம் நிறுத்தியது. கரோனா பாதிப்புக்கு ஒரே ரயிலில் பயணிகள் ஒன்றாகப் பயணிக்கும்போது தொற்று ஏற்படும் என்பதால் ரயில்களை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்து வருகிறது.
நாடு முழுவதும் 168 ரயில் சேவைகள் மார்ச் 31 வரை ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் பயணிகளும் தாங்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்து வருகின்றனர். இந்நிலையில், பயணிகள் ரத்து செய்யும் டிக்கெட்டுகளுக்கான அபராதத் தொகை எதுவும் பிடித்தம் செய்யப்படாமல் முழுதுமாக 100 சதவீதம் தொகை திருப்பி வழங்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago