கரோனா வைரஸ் பீதிக்கு நடுவிலும், அரசியல் காரணங்களுக்காக புதுச்சேரி ஆளுநரை முதல்வர் விமர்சிக்க, பதிலுக்கு ஆளுநரும் குற்றச்சாட்டி விமர்சித்துள்ளார். கரோனா காய்ச்சல் அச்சுறுத்தல்மக்களிடையே உள்ள சூழலில்இருவரும் நீதிமன்றம் குறிப்பிட்டப் படி இணைந்து பணியாற்றாமல் மாறி மாறி விமர்சித்து வருவது மக்கள் மத்தியில் சலிப்பை ஏற் படுத்தியிருக்கிறது.
புதுச்சேரி முதல்வர் நாராய ணசாமி நேற்று சட்டப்பேரவையில் கரோனா வைரஸ் பாதிப்பு தொடர் பான பேட்டியின் போது ஆளுநர் கிரண்பேடியை நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி விமர்சித்தார்.
அப்போது பேசிய முதல்வர், "துணைநிலை ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரியின் பல்வேறு பகுதி களுக்கு ஆய்வுக்கு செல்லலாம். ஆனால் அதிகாரிகளுக்கு தன்னிச் சையாக உத்தரவிட முடியாது, சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கு கருத்துகளை அனுப்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது.
இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் துணை நிலை ஆளுநர் கிரண்பெடி செயல் படுவார் எனநினைக்கிறேன். அவர் மீறி செயல் பட்டால் அதன் விளைவு களை சந்திக்க நேரிடும்" என எச்சரித்தார்.
வழக்கம் போல்
வாட்ஸ் அப்பில் பதில்
இதைத் தொடர்ந்து வாட்ஸ் அப்பில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பதிலுக்கு முதல்வரை விமர்சித்துள்ளார்.
அதில், தற்போதைய தீர்ப்பின் படி புதுச்சேரி நிர்வாகமானது யூனியன் பிரதேச சட்டம் மற்றும் நிதி மற்றும் நிர்வாக விதிகளின்படி நடக்கிறது என்பது தெளிவாகிறது. ஏற்கெனவே வெளியான தீர்ப்புகளில் தேர்தல் ஆணையர் நியமனம், இலவச அரிசிக்கு பதிலாக வங்கி கணக்கில் பணம் ஆகிய தீர்ப்புகளிலும் இதே சட்டங்களும், விதிகளும் உறுதி செய்யப்பட்டன. கடந்த மூன்று நீதிமன்ற வழக்குகளிலும் முதல்வர் உண்மையில் தோல்வியடைந்தார். ஆனால், மக்களிடம் அதை பகிர்ந்துகொள்ளவில்லை. தற்போது அதை நேரடியாக தெரிவிக்க நிர்பந்திக் கப்படுகிறேன். மக்கள் இதை தெரிந்து கொள்ள வேண்டும்.
இத்தீர்ப்பு ஆளுநர் மாளிகை யான ராஜ்நிவாஸுக்கான வெற்றிஅல்ல. நாங்கள் இங்கு வெல்லவோ,தோற்கவோ இல்லை. சேவை செய்யவே உள்ளோம். நாடாளு மன்றத்தால் வகுக்கப்பட்ட சட்டங்களையும். விதிகளையும் அதைகுடியரசுத்தலைவர் வழங்கிய தையும் பின்பற்றி செய்கிறோம்.
அரசு அதிகாரிகள் அச்சமின் றியும், பாரபட்சமின்றியும் பணி யாற்ற முதல்வர் அனுமதிக்க வேண்டும். அத்துடன் துன்புறுத்தல்களை எதிர்கொண்ட அவர்களை மதிக்கவும் வேண்டும் என்றும் கோருகி றேன்.
மூன்று தீர்ப்புகளும் இந்திய அரசுக்கும், ஆளுநருக்கும் ஆதரவாக வந்த பிறகு, புதுச்சேரி மாநிலமல்ல என்பதை முதல்வர் ஏற்றி ருப்பார் என்று நினைத்திருந்தேன். நான் இங்கு ஆளுநராக வரு வதற்கு முன்பே புதுச்சேரி யூனியன்பிரதேச சட்டம், வணிக மற்றும் நிதி சட்டங்களின் கீழ்தான் நிர்வகிக்கபடுகிறது என்று குறிப் பிட்டுள்ளார்.
கரோனா வைரஸ் பரவல் பீதி, மாணவர்களுக்கு திடீர் விடுமுறை, தேர்வு நெருக்கடி, பயணங்கள் ரத்து என மக்கள் பீதியில் உள்ள சூழலில் இருவரும் நீதிமன்றம் குறிப்பிட்டப்படி இணைந்து பணியாற்றாமல் மாறி மாறி விமர்சித்து வருவது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago