புதுச்சேரியில் கரோனா அச்சுறுத்தல்: இன்று முதல் பார்கள் மூடல்

By செய்திப்பிரிவு

கரோனா அச்சுறுத்தலும், பொது மக்களின் வலியுறுத்தலாலும் புதுச்சேரியில் இன்று முதல் மது அருந்தும் இடங்கள் (பார்கள்) அனைத் தும் மூடப்படும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கரோனா அச்சுறுத்தலிருந்து மக்களை பாதுகாப்பது தொடர்பாக தலைமைச் செயல கத்தில் நேற்று முன்தினம் ஆய்வுக் கூட்டம் நடந்தது. அப்போது மது பான பார்கள் மூடுவது தொடர்பாக 2 நாட்களில் முடிவு எடுக்க உள்ளதாக அமைச்சர்களின் அறிவுறுத் தல்படி முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருந்தார்.

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழகத்தில் டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் புதுச்சேரி, காரைக்கா லில் உள்ள ஏராளமான மது பான பார்கள், மதுபான விற்பனை யுடன் கூடிய உணவகங்கள், சாராயக்கடைகள் உள்ளன. அங்கு ஏராளமா னோர் கூடும் சூழலில் கரோனா வைரஸ் அச்சம் மக்களிடம் எழுந்துள்ள சூழலில் பாதுகாப்பு நடவடிக்கைக்காக புதுச்சேரி அரசு மதுப்பான கடைகளை மூட நடவடிக்கை எடுக்காமல் விலக்கு அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதே நேரத்தில் மாஹே பிராந்தியத்தில் மட்டும் நேற்றுமுன்தினம் முதல் மதுபான பார்களை கலால்துறை மூடியது. தமிழ கத்திலும் பார்கள் மூடப்பட்டன. இதனால் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமா னோர் புதுச்சேரி, காரைக்கால் பார் களில் குவிந்தனர். இது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இச்சூழலில் முதல்வர் நாராயணசாமி நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,

"பொதுமக்கள் உணர்வுக்கு மதிப்பு தந்து புதுச்சேரி, காரைக் கால், ஏனாமில் உள்ள அனைத்து மது அருந்தும் இடங்கள் (பார் கள்) மற்றும் மதுவுடன் அமர்ந்து சாப்பிடும் உணவகங்கள் அனைத் தும் இன்று (மார்ச் 19) முதல் மூடப்படும்.

மது மொத்த விற்பனை, சில்லறை விற்பனை கடைகள் இயங்கும். மாஹேயில் கரோனாபாதிப்பால் வயது முதிர்ந்த பெண் சிகிச்சையில் உள்ளார். கேரளத்தை யொட்டியுள்ள மாஹேயில் முன்எச்சரிக்கை நடவடிக்கை தொடர் பாக இன்று சுகாதாரத்துறை அமைச்சருடன் சென்று ஆய்வு செய்ய உள்ளேன்" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்