கரோனாவைக் கட்டுப்படுத்த வேண்டி ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் சிறப்பு வழிபாடு

By செய்திப்பிரிவு

ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் கோவிட்-19 வைரஸைக் கட்டுப்படுத்த வேண்டி தன்வந்திரி ஹோமம் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது.

உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வருகை தந்து ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் தீர்த்தமாடி சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

ராமேசுவரத்திற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் நாள்தோறும் வந்து செல்வதால் ராமநாதசுவாமி கோயிலில் கோவிட்-19 பரவலாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமநாதசுவாமி கோயில் முழுவதும் மருந்து 24 மணி நேரத்திற்கு ஒரு முறை தெளிப்பான் கருவி மூலம் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

கோயில் நுழைவாயிலில் தற்காலிக மருத்துவப் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டு, பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உடலின் வெப்பநிலை குறித்து சோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில் ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் ராமநாதசுவாமி புரோகிதர் நல சங்கம் சார்பாக உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கோவிட்-19யை கட்டுப்படுத்தவும் , விரைவில் மருந்து கண்டுபிடிக்கவும் வேண்டியும் சிவாச்சாரியர்களை கொண்டு மிகப்பெரிய தன்வந்திரி ஹோமம், மித்ருஞ்சய ஹோமம் ஆகியவை புதன்கிழமை காலை நடைபெற்றது.

மேலும் புனித நீர் வைத்து சிறப்பு யாகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE