கரோனா நோயாளிகளை ரகசிய இடத்தில் வைத்து சிகிச்சை செய்வதாக காணொலி: வதந்தி பரப்பிய நபர் கைது

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அடுக்குமாடிக் குடியிருப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் காணொலி மூலம் வதந்தி பரப்பி, பீதி ஏற்படுத்திய நபரை மதுரை போலீஸார் கைது செய்தனர்.

கரோனா வைரஸ் தொற்று நாடெங்கும் பரவி வரும் நிலையில், அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதேநேரம் வாட்ஸ் அப் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி பொதுமக்களை பீதியில் ஆழ்த்துவதும் அதிகரித்து வருகிறது.

இதைத் தடுக்க பொதுமக்கள் யாராவது வதந்தி பரப்பினால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது. ஆனாலும், அதையும் மீறி வதந்தி பரப்புவது அதிகரித்து வருகிறது. கோழி இறைச்சியால் கரோனா பரவுகிறது என வதந்தி பரப்பிய 17 வயதுச் சிறுவன் உட்பட 3 பேரை ஏற்கெனவே போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் மதுரையில் ஒரு காணொலி வேகமாக வாட்ஸ் அப்பில் பரவியது. மதுரை மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள வீட்டுவசதி வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் கரோனா வைரஸ் பாதித்த 47 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு ரகசியமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இதுபற்றி அறிந்த பொதுமக்கள் அங்கு கூடி அவர்களை வெளியேற்றக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் காணொலி பரவியது.

இதையடுத்து இந்த விவகாரம் மதுரை போலீஸ் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. போலீஸார் சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் வதந்தி பரப்பிய நபர் குறித்து விசாரணை நடத்தினர். அதில் வதந்தியைப் பரப்பி வீடியோ வெளியிட்ட நபர் திருச்சியைச் சேர்ந்த செல்வம் (56) என்பதும் அவர் மதுரை ஒத்தக்கடையில் தங்கியிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து ஒத்தக்கடை போலீஸார் மதுரை புதுதாமரைப்பட்டி பகுதியில் பதுங்கி இருந்த செல்வத்தைக் கைது செய்து அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். கரோனா குறித்து தவறான தகவலை பொதுமக்கள் மத்தியில் பரப்பி, பீதியை ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

39 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்