நாமக்கல்லில் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு முட்டைக்கோழிப் பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத் தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதால் கோவிட்-19 பாதிப்பு ஏற்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி விடப்படுகிறது. இதனால், கிலோ ரூ.80-க்கு விற்பனையான கறிக்கோழி ரூ.10-க்கு வந்துவிட்டது.
வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்த உள்ளோம். மேலும், கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதால் கோவிட்-19 பாதிப்பு ஏற்படாது என அரசு சார்பில் விளம்பரம் செய்யும்படி வலியுறுத்த உள்ளோம்.
கோழி இறைச்சி, முட்டை சாப்பிட்டால் கோவிட்-19 பாதிப்பு ஏற்படும் என்பதை நிரூபித்தால் தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி சார்பில் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும்.
கோவிட்-19 வதந்தி காரணமாக 15 கோடி முட்டை தேங்கியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கறிக்கோழி விற்பனை 15 கோடி ரூபாய் வரையும், நாள்தோறும் முட்டைக் கோழிப்பண்ணையாளர்களுக்கு ரூ.8 கோடியும் இழப்பு ஏற்படுகிறது. கடந்த 2 வாரங்களில் ரூ.500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago