தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு கச்சத்தீவை மீட்பதே நிரந்தரத் தீர்வு என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படையால் தாக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் மறுவாழ்வு வழங்கக் கோரி மீனவர் நல சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வில் இன்று (மார்ச் 16) விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிமன்ற உத்தரவின்படி, தமிழ்நாடு மீன்வளத்துறை இயக்குநர் சமீரன் நேரில் ஆஜராகி, அறிக்கை தாக்கல் செய்தார். அதில், இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு கச்சத்தீவை மீட்பதே நிரந்தரத் தீர்வாக இருக்கும் என்ற நிலைப்பாட்டில் தமிழக அரசு திடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
» கரோனா பரவாமல் தடுக்க டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு
» அவசர வழக்குகளுக்கு மட்டுமே விசாரணை: பாட்னா உயர் நீதிமன்றம் முடிவு
கடந்த மார்ச் 10-ம் தேதி நிலவரப்படி, தமிழக மீனவர்கள் 3 பேர் மட்டுமே இலங்கை சிறையில் உள்ளதாகவும், இலங்கையில் 2009-ம் ஆண்டு உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த பிறகு, தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு, கைது நடவடிக்கைகள் குறைந்துள்ளன என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்திற்கு 250 ரூபாய் வழங்கப்படுவதாகவும், 1,750 மீனவக் குடும்பங்களுக்கு மொத்தம் ஒரு கோடியே 77 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆழ்கடல் மீன்பிடித் திட்டத்தை அமல்படுத்த 286 கோடி ரூபாயை, மத்திய, மாநில அரசுகள் விடுவித்துள்ளது எனத் தெரிவித்துள்ள மீன்வளத்துறை இயக்குநர், இத்திட்டத்தின் கீழ் 750 படகுகள் கட்ட உதவி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குப் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், அறிக்கையை ஆய்வு செய்து மனுதாரர் பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும், இந்தத் திட்டங்களை அமல்படுத்தியதில் உள்ள முன்னேற்றங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை 6 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago