தனியார் மருத்துவமனைகளில் கோவிட்-19 வைரஸ் அறிகுறிகளுடன் ஏராளமானோர் சிகிச்சை

By செய்திப்பிரிவு

கோவிட்-19 வைரஸ் அறிகுறிகளுடன் தனியார் மருத்துமனைகளில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட்-19 வைரஸ், சீனாவைத் தொடர்ந்து இந்தியா உட்பட 140-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு வேகமாக பரவியுள்ளது. இதுவரை இந்த வைரஸால் 1.55 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட, ஓமனில் இருந்து வந்த காஞ்சிபுரம் பொறியாளர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தார். 10-க்கும் மேற்பட்டோர் வைரஸ் அறிகுறிகளுடன் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கோவிட்-19 வைரஸுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அரசு பொது மருத்துவமனை உட்பட மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளுடன் கூடிய 300 சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. வைரஸ் அறிகுறிகளான காய்ச்சல், இருமல், தும்மல், சளி பிரச்சினை இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்கு வந்து சிகிச்சைப் பெறும்படி சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், அரசு மருத்துவமனைகளுக்கு சென்றால் அலைக்கழிக்கப்படுவதாக கூறும் பொதுமக்கள், தனியார் மருத்துவமனைகளுக்கே செல்கின்றனர். சென்னை, திருச்சி, மதுரை, கோவை உட்பட முக்கிய நகரங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் வைரஸ் அறிகுறிகளுடன் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், தமிழகத்தில் கோவிட்-19 வைரஸ் குறித்த அச்சம் பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “கோவிட்-19 வைரஸ் அறிகுறிகளுடன் இருப்பவர்களுக்கு தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்கக் கூடாது. அவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் அவர்களின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்படும். சென்னை கிண்டி, தேனி, திருவாரூரில் பரிசோதனை மையங்கள் இயங்கி வருகிறது” என்றனர். கோவிட்-19 வைரஸ் அறிகுறிகளுடன் இருப்பவர்களுக்கு தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்கக்கூடாது. அவர்களை உடனடியாக அரசு மருத்துவமனை
களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்