நடிகர் ரஜினிகாந்த் சொன்ன கருத்துக்கள் தமிழகத்துக்கு தேவையானது : ஹெச்.ராஜா

By செய்திப்பிரிவு

நடிகர் ரஜினிகாந்த் சொன்ன கருத்துக்கள் தமிழகத்துக்கு தேவையான கருத்துக்கள் என்று பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, நடிகர் ரஜினிகாந்த் கட்சித் தொடங்கப் போகிறாரா இல்லையா என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

“தமிழ்நாட்டில்தான் திருமங்கலம் பார்முலாவை ஆரம்பித்து குடிமக்களையும், வாக்காளரையும் கெடுத்து விட்டனர். அதனால் இதில் மாற்றம் வேண்டும் என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன்.

அதாவது ஜாதிபலம் பணபலம் இல்லாமல் நேர்மையான தேர்தல் நடக்க வேண்டும் அதற்கு மக்களையும் தயார்படுத்த வேண்டும். எந்தக் கட்சியாக இருந்தாலும் அதன் தொண்டர்களைத் தயார்ப்படுத்த வேண்டும் என்ற அளவில் ரஜினிகாந்த் கூறுவதை ஏற்றுக் கொள்கிறேன்.

அதற்குப் பிறகு அவர் எப்படி செயலாற்றுவார், வருவார் வரமாட்டார், கட்சி ஆரம்பிப்பார், ஆரம்பிக்க மாட்டார் என்பதையெல்லாம் நாம் விவாதிக்க வேண்டியதில்லை. அது அவரோட முடிவு” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

34 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்