தூத்துக்குடி அருகே நடுக்கடலில் படகு மூழ்கி தத்தளித்த 5 மீனவர்களை சக மீனவர்கள் பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.
தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த ஆல்பர்ட் மகன் பெர்க்மான்ஸ் ( 35). இவருக்கு சொந்தமான பைபர் படகில் இன்று அதிகாலையில் திரேஸ்புரம், தாளமுத்துநகரைச் சேர்ந்த மைக்கேல் மகன் வினோத் (34), இன்னாசிபாலு மகன் வினோத் (35), இன்னாசி மகன் சின்னவேல்ராஜா (35), சிவன்ராஜ் (45) ஆகியோர் கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டனர்.
அவர்கள் கீழவைப்பார் பகுதியில் இருந்து சுமார் 15 நாட்டிக்கல் கடல்மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர்.
அப்போது திடீரென படகில் ஓட்டை ஏற்பட்டு படகு மூழ்கியது. இதனால் படகில் இருந்த 5 பேரும் நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டு இருந்தனர்.
» கரோனா அச்சம் எதிரொலி: சபரிமலையில் சில நிமிடங்களிலேயே தரிசனம் முடித்துக் கிளம்பிய பக்தர்கள்
» இரட்டை ரயில் பாதை பணிகளால் மார்ச் 28 வரை ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
அப்போது தருவைகுளத்தைச் சேர்ந்த மீனவர் சௌந்தரராஜ் பைபர் படகில் அப்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தார்.
அவர் பெர்க்மான்ஸ் உள்ளிட்ட 5 மீனவர்கள் தண்ணீரில் தத்தளித்துக்கொண்டு இருப்பதை பார்த்து, அவர்களை பத்திரமாக மீட்டு தனது படகில் கரைக்கு அழைத்து வந்தார்.
தண்ணீர் தத்தளித்ததால், சோர்வாக காணப்பட்ட 5 மீனவர்களும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்கள் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago