இரட்டை ரயில் பாதை பணிகளால் மார்ச் 28 வரை ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

By அ.அருள்தாசன்

இரட்டை ரயில் பாதை பணிகளால் மார்ச் 28 வரை ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "சமீபத்தில் தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்த கடம்பூர் முதல் கங்கைகொண்டான் வரை மற்றும் தட்டப்பாறை முதல் வாஞ்சி மணியாச்சி வரை புதிய இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை மறுநாள் (16-ம் தேதி) முதல் 28.3.2020 வரை ரயில் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி வண்டி எண் 22670/22669 கோயம்புத்தூர்/ வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி - வாஞ்சி மணியாச்சி/ கோயம்புத்தூர் இணைப்பு ரயில்கள் மற்றும் வண்டி எண் 16130/16129 தூத்துக்குடி/ வாஞ்சி மணியாச்சி சென்னை எழும்பூர் - தூத்துக்குடி - வாஞ்சி மணியாச்சி/ சென்னை எழும்பூர் இணைப்பு ரயில்கள் ஆகியவை நாளை முதல் 28-ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

வண்டி எண் 22621 ராமேஸ்வரம் - கன்னியாகுமரி விரைவு ரயில் வரும் 2-ம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண் 22622 கன்னியாகுமரி - ராமேஸ்வரம் விரைவு ரயில் மற்றும் வண்டி எண் 06001 சென்னை எழும்பூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில் ஆகியவை வரும் 27-ம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண் 56035/56036 திருச்செந்தூர் - திருநெல்வேலி - திருச்செந்தூர் பயணிகள் ரயில் வரும் 19.3.2020 முதல் 28.3.2020 வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண் 56742/56741 திருநெல்வேலி - தூத்துக்குடி - திருநெல்வேலி பயணிகள் ரயில் நாளை முதல் 28-ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண் 16191 தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா விரைவு ரயில் இன்று முதல் வரும் 27-ம் தேதி வரை திண்டுக்கல் - நாகர்கோவில் ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண் 16192 நாகர்கோயில் - தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் நாளை முதல் 28-ம் தேதி வரை நாகர்கோயில் - திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண் 22627/22628 திருச்சி - திருவனந்தபுரம் - திருச்சி விரைவு ரயில் நாளை முதல் 28-ம் தேதி வரை கோவில்பட்டி - திருவனந்தபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண் 16236 மைசூர் - தூத்துக்குடி விரைவு ரயில் மார்ச் 26 மற்றும் 27 ஆகிய நாட்களில் மதுரை - தூத்துக்குடி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண் 16235 தூத்துக்குடி - மைசூர் விரைவு ரயில் மார்ச் 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் தூத்துக்குடி - மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண் 11021/11022 தாதர் - திருநெல்வேலி - தாதர் விரைவு ரயில் மார்ச் 27 அன்று திண்டுக்கல் - திருநெல்வேலி ரயில் நிலையம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண் 01704 ஜபல்பூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில் மார்ச் 27 அன்று திருச்சி - திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண் 01703 திருநெல்வேலி - ஜபல்பூர் சிறப்பு ரயில் மார்ச் 28 அன்று திருநெல்வேலி - திருச்சி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண் 56768 திருச்செந்தூர் - தூத்துக்குடி பயணிகள் ரயில் நாளை திருநெல்வேலி - தூத்துக்குடி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண் 56767/56768 தூத்துக்குடி - திருச்செந்தூர் - தூத்துக்குடி பயணிகள் ரயில் வரும் 17-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை தூத்துக்குடி - திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண் 56319/56320 நாகர்கோவில் - கோவை - நாகர்கோவில் பயணிகள் ரயில் 19.3.2020 முதல் 28.3.2020 வரை திருநெல்வேலி - திண்டுக்கல் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண் 56825 ஈரோடு - திருநெல்வேலி பயணிகள் ரயில் 22.3.2020 அன்று விருதுநகர் - திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண் 56769/56770 பாலக்காடு - திருச்செந்தூர் - பாலக்காடு பயணிகள் ரயில் மார்ச் 16, 17, 19, 20, 21, 23, 24, 26, 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் கோவில்பட்டி - திருநெல்வேலி ரயில் நிலையம் இடையேயும் மார்ச் 18, 22, 25 ஆகிய நாட்களில் மதுரை - திருநெல்வேலி இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண் 56826 திருநெல்வேலி - ஈரோடு பயணிகள் ரயில் மார்ச் 28 அன்று திருநெல்வேலி - விருதுநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண் 56701 புனலூர் - மதுரை பயணிகள் ரயில் 24.3.2020 முதல் 27.3.2020 வரை திருநெல்வேலி - மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண் 56700 மதுரை - புனலூர் பயணிகள் ரயில் 25.3.2020 முதல் 28.3.2020 வரை மதுரை - திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண் 16787 திருநெல்வேலி - மாதா வைஷ்ணோ தேவி கட்ரா விரைவு ரயில் திருநெல்வேலியிலிருந்து மார்ச் 20 அன்று மாலை 5 மணிக்கும், மார்ச் 23 அன்று மாலை 4.30 மணிக்கும் புறப்படும்.

வண்டி எண் 11022 திருநெல்வேலி - தாதர் விரைவு ரயில் திருநெல்வேலியிலிருந்து மார்ச் 23 மற்றும் 26 ஆகிய நாட்களில் மாலை 4 மணிக்கு புறப்படும்.

வண்டி எண் 16862 கன்னியாகுமரி - புதுச்சேரி விரைவு ரயில் மார்ச் 23 அன்று கன்னியாகுமரியில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும்.

வண்டி எண் 56718 திருநெல்வேலி - நாகர்கோவில் பயணிகள் ரயில் மார்ச் 26 அன்று திருநெல்வேலியிலிருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும்.

வண்டி எண் 56770 திருச்செந்தூர் - பாலக்காடு பயணிகள் ரயில் மார்ச் 18, 22 மற்றும் 25 ஆகிய நாட்களில் மதுரையில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்படும்.

வண்டி எண் 16787 திருநெல்வேலி - மாதா வைஷ்ணவ தேவி கட்ரா விரைவு ரயில் மார்ச் 27 அன்று அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். தென்காசியில் நின்று செல்லும்.

வண்டி எண் 16127 சென்னை எழும்பூர் - குருவாயூர் விரைவு ரயில் மார்ச் 27 அன்று விருதுநகர், ராஜபாளையம், தென்காசி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இந்த ரயில் தென்காசியில் நின்று செல்லும்.

வண்டி எண் 12689 எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் விரைவு ரயில் மார்ச் 28 அன்று விருதுநகர், ராஜபாளையம், தென்காசி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இந்த ரயில் தென்காசியில் நின்று செல்லும்.

வண்டி எண் 12666 கன்னியாகுமரி - ஹௌரா விரைவு ரயில் மார்ச் 28 அன்று அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இந்த ரயில் தென்காசியில் நின்று செல்லும்.

வண்டி எண் 16127 சென்னை எழும்பூர் - குருவாயூர் விரைவு ரயில் மார்ச் 22, 25, 26, 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் திருநெல்வேலியிலிருந்து 90 நிமிடங்கள் கால தாமதமாக புறப்படும்.

வண்டி எண் 17236 நாகர்கோவில் - பெங்களூரு விரைவு ரயில் மார்ச் 25, 26, 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து 60 நிமிடங்கள் தாமதமாக புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்