தமிழகத்தில் என்பிஆர் கணக்கெடுப்பு நிறுத்திவைப்பு: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் என்பிஆர் கணக்கெடுப்புக்கான அறிவிப்பை, கணக்கெடுப்பை தொடங்க மத்திய அரசின் பதிலுரை கிடைக்காததால் என்பிஆர் பணி நிறுத்தி வைக்கப்படுகிறது என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி உள்ளிட்ட மத்திய அரசின் கொண்டுவரப்பட்ட, கொண்டுவரப்பட உள்ள சட்டங்கள் குறித்து இந்தியா முழுதும் எதிர்க்கட்சிகள், சிறுபான்மை மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

சிஏஏ சட்டத்துக்கு எதிராக நாடுமுழுதும் சிறுபான்மை மக்கள், எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். என்பிஆர் கணக்கெடுப்பு பணியில் சர்ச்சைக்குரிய கேள்விகள் குறித்தும் சிறுபான்மை மக்கள், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் இந்தச் சட்டத்தில் சிஏஏ சட்டம் குறித்து 13 மாநிலங்கள் எதிர்த்து தீர்மானம் போட்டுள்ளன. தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களும் இதற்கு எதிராகவும் என்பிஆர் சட்டத்தை பழைய நிலையிலேயே அமல்படுத்துவோம் என்றும் தெரிவித்துள்ளனர். தமிழகத்திலும் சென்னை வண்ணாரப்பேட்டை, கோவை, நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இஸ்லாமியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சட்டப்பேரவையில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக்கோரியும், என்பிஆரை பழைய முறையில் அமல்படுத்தவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் என்பிஆர் சட்டத்தை அமல் படுத்துவதில் இஸ்லாமியர்கள் கோரிக்கையைப் பரிசீலிப்போம், 3 கேள்விகள் இருக்காது, மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளோம் என முதல்வர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மத்திய அரசுக்கு மாநில அரசு இதுகுறித்து கடிதம் எழுதியிருந்தது. நேற்று சட்டப்பேரவையில் ஸ்டாலின் இதுகுறித்து பேசியபோது மத்திய அரசுக்கு மாநில அரசு எழுதிய கடிதத்துக்கு இதுவரை மத்திய அரசு பதிலளிக்கவில்லை என தெரிவித்திருந்தார். இந்நிலையில் மத்திய அரசு பதிலளிக்காத காரணத்தால் என்பிஆர் கணக்கெடுக்கும் பணியை நிறுத்தி வைப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

அவரது செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

“என்பிஆர் ஏற்கெனவே சொல்லிவிட்டேன். இதுவரை அரசு நோட்டிபிகேஷன் கொடுக்கவில்லை. அவர்கள் பதிலுரை வந்தப்பின் என்பிஆர் கணக்கெடுப்பு தொடங்கும். இதுவரை மத்திய அரசு பதிலளிக்கவில்லை. பதிலளித்தப்பின் என்பிஆர் கணக்கெடுப்பு தொடங்கும் அதுவரை என்பிஆர் கணக்கெடுக்கும் பணி நிறுத்திவைக்கப்படுகிறது”.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்