கல்லிடைக்குறிச்சி செவிலியர் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் தூக்கு தண்டனை குற்றவாளிகளை நேரில் ஆஜர்படுத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் 2008-ல் செவிலியர் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் இருவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதை உறுதி செய்யக்கோரிய வழக்கில் தண்டனை பெற்ற இருவரையும் நேரில் ஆஜர் படுத்த சிறைத்துறை அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லை, கோட்டை வாசல் தெருவைs சேர்ந்தவர் தமிழ்செல்வி. இவர் மணிமுத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். இவரது கணவர் உயிரிழந்த பின் தனது மகனுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் செவிலியர் தமிழ்செல்வி கடந்த 29-09- 2008 அன்று அவரது வீட்டு மாடியில் படுகொலை செய்யப்பட்டுg கிடந்தார். அவரது வாயினுள் துண்டை திணித்து நைலான் கயிறால் கழுத்தை நெரித்து கொலை செய்தது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் தமிழ்ச்செல்வி வீட்டின் பீரோவில் இருந்த 67 கிராம் எடையுள்ள நகைகளை கொள்ளையடித்துs சென்றதும் தெரியவந்தது. இந்த கொலை வழக்கு தொடர்பாக கல்லிடைக்குறிச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்த விசாரித்தனர்.
காவல்துறையினர் விசாரணையில் வசந்த் மற்றும் ராஜேஷ் ஆகியோர் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நெல்லை மாவட்ட மகளிர் நீதிமன்றம் கொலைக் குற்றம் உறுதி செய்யப்பட்ட ராஜேஷ், வசந்த் ஆகிய இரண்டு பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டது.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி காவல்நிலைய ஆய்வாளர், இந்த தண்டனையை உறுதி செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு, தண்டனை விதிக்கப்பட்ட இருவரையும் மார்ச் 17-ல் நேரில் ஆஜர்படுத்த சிறைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago