சிறுமிகள் பாதுகாப்பின் அடிப்படை சிக்கல்களை கையாளும் சாவி தாயும், ஆசிரியர்களும் தான்: கிரண்பேடி

இந்திய சமூகத்தில் சிறுமிகளின் பாதுகாப்பின் அடிப்படை சிக்கல்களை வெற்றிக்கரமாக கையாள்வதற்கான சாவி தாயும், ஆசிரியர்களும் தான் என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி ராஜ்நிவாஸில் அதையடுத்து பெண்கள் தினவிழா இன்று கொண்டாடப்பட்டது. அங்கு பணியாற்றும் பெண் ஊழியர்கள் பங்கேற்று கேக் வெட்டி கொண்டாடினர்.

அதைத்தொடர்ந்து கிரண்பேடி கூறுகையில், பெண்கள் தினத்தன்று ஊடகங்களால் மீண்டும், மீண்டும் கேட்கப்படும் கேள்வியானது, பெண்கள் தங்கள் பாதுகாப்பை மேம்படுத்த என்ன செய்ய முடியும் என்பது தான்.

இந்த மகளிர் நாளி்ல் ஒவ்வொரு தாயும், ஆசிரியரும் தனது மகன் மற்றும் மாணவர் அதிக பொறுப்புடன் இருக்க கற்று கொள்வதையும், அவரது மகள், மாணவர் திறமையான மற்றும் தன்னம்பிக்கை உடையவர் என்பதையும் உறுதிப்படுத்தட்டும்.

இந்திய சமுதாயத்தில் எங்கள் சிறுமிகளின் பாதுகாப்பின் அடிப்படை சிக்கல்களை வெற்றிக்கரமாக கையாள்வோம். தாயும், ஆசிரியர்களுமே இதற்கான சாவி. என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE