கீழமை நீதிமன்றம் பிறப்பிக்கும் இழப்பீட்டுத் தொகையை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் டெபாசிட் செய்யவில்லை என்றால், மேல்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என உயர்நீதிமன்ற பதிவுத்துறை மற்றும்மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2007-ம் ஆண்டு பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த 22 வயது இளைஞரின் குடும்பத்துக்கு ரூ.2.93 லட்சம் இழப்பீடு வழங்க தொழிலாளர் நலத் துறை துணை ஆணையர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து சம்பந்தப்பட்ட நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிஎஸ்.வைத்தியநாதன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
பலியான இளைஞரின் குடும்பத்துக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என தொழிலாளர் நலத் துறைதுணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். ஆனால் அதன்படி அந்ததொகையை வங்கியில் டெபாசிட்செய்யாமல் நிறுவனங்கள் மேல்முறையீட்டு ஆணையங்களிலோ அல்லது உயர் நீதிமன்றத்திலோ மேல்முறையீடு செய்வதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைப்பது தாமதமாகிறது.
எனவே கீழமை நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் இழப்பீ்ட்டுத் தொகையை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் டெபாசிட் செய்யாமல் மேல்முறையீடு செய்யக்கூடாது. இந்த வழக்கில் தொழிலாளர் நலத் துறை துணை ஆணையர் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி இழப்பீட்டுத் தொகையை 3 மாதத்துக்குள் விபத்து நடந்த நாளில் இருந்து 12 சதவீத வட்டியுடன் சம்பந்தப்பட்ட நிறுவனம் டெபாசிட் செய்ய வேண்டும்.
இதுபோன்ற மேல்முறையீட்டு வழக்குகளை பட்டியலிடுவதற்கு முன்பு இழப்பீட்டுத் தொகை டெபாசிட் செய்யப்பட்டு விட்டதா என்பதை உயர் நீதிமன்ற பதிவுத் துறையும் உறுதி செய்ய வேண்டும்.
ஒருவேளை இழப்பீட்டு தொகையை டெபாசிட் செய்யவில்லை என்றால் மேல்முறையீட்டு வழக்குகளை உயர் நீதிமன்றமும், மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களும் விசாரணைக்கு ஏற்கக் கூடாது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago