திருவாடானை அருகே தொண்டி பகுதியைச் சேர்ந்த தொண்டிராஜ் என்பவரது மனைவி அழகம்மாள்(60). இவர் பிப்.15-ம் தேதி தொண்டியில் உள்ள நிலா கிளினிக்கில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு தவறான சிகிச்சையால் அழகம்மாள் இறந்து விட்டதாக, அவரது மகன் முருகேசன் தொண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீஸ் விசாரணையில் நிலா கிளினிக்கை நடத்தி வந்த பாபி ராஜலெட்சுமி என்பவர் 10-ம் வகுப்பும், அழகுக் கலை பயிற்சியும் மட்டும் முடித்திருந்தது தெரியவந்தது.
வேறு ஒருவரின் சான்றிதழ்
மேலும் அவர் வைத்திருந்த மருத்துவச் சான்றிதழ், 1987-ல் சென்னை மருத்துவக் கல்லூரியில் பயின்று, தற்போது ஹைதராபாதில் மருத்துவராக பணியாற்றும் ஒருவரது சான்றிதழ் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து பாபி ராஜலெட்சுமி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பீட்டர், கலந்தர் ஆசிக் அகமது, செல்வம், சுரேந்திரன் ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago