உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்றுவரும் பேராசிரியர் அன்பழகன் உடல் நிலையில் முன்னேற்றமில்லை என்று ஸ்டாலின் கவலை தெரிவித்துள்ளார்.
திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வயோதிகம் காரணமாக கடந்த ஓராண்டாக வீட்டில் சிகிச்சையில் இருந்தார். அவருக்கு சுவாச பிரச்சினை காரணமாக மூக்கில் டியூப் செலுத்தப்பட்டு அதன்மூலம் சுவாசித்து வந்தார். 98 வயதுடைய அன்பழகனின் உடல் நிலை மோசமடையவே கடந்த மாதம் 24-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகிறார்.
அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அவரை மருத்துவமனைக்குச் சென்று பார்த்தார் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“ ஓராண்டு காலமாக வயது முதிர்வின் காரணமாக தனது வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். திடீரென கடந்த 24-ம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டு அப்போலோவில் தீவிர கண்காணிப்பு பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.,
மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சை அவருக்கு பயனளிக்க கூடிய வகையில் இல்லை. இருந்தாலும் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது”
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago