விருதுநகர் மாவட்டம் நத்தம்பட்டி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு சக காவலர்கள் ரூ.2.50 லட்சம் நிதியுதவி அளித்தனர்.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள எம்.சுக்குலாபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்பாண்டி (32). விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நத்தம்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
கடந்த ஜனவரி 10-ம் தேதி விடுப்பிலிருந்த காவலர் கார்த்திக்பாண்டியும் அவரது நண்பர் ஜெயபாண்டி (34) என்பவரும் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரை நோக்கி பைக்கில் சென்றபோது எதிரே வந்த பைக் மோதி விபத்தில் சிக்கினர்.
இந்த விபத்தில், காவலர் கார்த்திக்பாண்டி மற்றும் எதிர்த்திசையில் பைக்கில் வந்த கல்லூரி மாணவர்கள் ஞானராஜ் ஜெயந்த் (21), கேசவன் (19) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
» கரோனா: புதுச்சேரியில் முகக்கவசம் அணிவோர் எண்ணிக்கை அதிகரிப்பு; கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை
இந்நிலையில், உயிரிழந்த காவலர் கார்த்திக் பாண்டியனுடன் 2008-ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் ஒன்று சேர்ந்து ரூ.2.50 லட்சம் திரட்டினர்.
இந்நிதியை உயிரிழந்த காவலர் கார்திக்பாண்டியின் மனைவி ருத்ரா மற்றும் குடும்பத்தினரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.பெருமாள் வழங்கி ஆறுதல் கூறினார்.
மேலும், கார்த்திக்பாண்டியனுடன் பணியாற்றிய சக காவலர்களும் கார்த்திக்பாண்டியன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago