இந்தியாவில் கரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், மதுரை விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. 15 இத்தாலியப் பயணிகள் 8 இந்தியர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.
இதனையடுத்து வெளிநாடுகளிலிருந்து வரும் அனைவரும் சோதிக்கப்படுவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் இன்று கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
» கல்லூரி மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை: நடிகர் சூர்யகாந்தின் மகன் கைது
இதில், விமானநிலைய இயக்குனர் செந்தில் வளவன் சுகாதாரத்துறை இணை இயக்குனர் பிரியா ராஜ் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் பிரபாகரன், தீயணைப்பு , சுங்கத் துறை அதிகாரிகள் மற்றும் குடியேற்றத் துறை அதிகாரிகள் விக்டர்,, பல்வேறு விமான நிறுவன அதிகாரிகள்,மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கரோனா வைரஸினால் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் , தற்காப்பு நடவடிக்கையாக ஊழியர்களின் பாதுகாப்பிற்காக முகக்கவசம், கையுறை அணிந்து பணிகளில் ஈடுபட வும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago