வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த மகாலட்சுமி தேர்வு

By எஸ்.ஸ்ரீனிவாசகன்

வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த மகாலட்சுமி தேர்வு செய்யப்பட்டார்.

வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 14 வார்டுகள் உள்ளன. இதில் அதிமுக 7 வார்டுகளிலும் திமுக 6 வார்டுகளிலும் வெற்றி பெற்றன. சுயேட்சை உறுப்பினர் ஒரு வார்டில் வெற்றி பெற்றார்.

சுயேட்சை உறுப்பினரின் ஆதரவுடன் அதிமுக தலைவர் பதவியைக் கைப்பற்ற திட்டமிட்டது. ஆனால், அதிமுக திமுக உறுப்பினர்களின் வருகை பதிவு இல்லாத காரணத்தால் 2 முறை மறைமுகத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று (மார்ச்.4) மீண்டும் மறைமுகத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இன்றைய தேர்தலுக்கு உறுப்பினர்கள் அனைவரும் வந்த நிலையில், அதிமுகவைச் சேர்ந்த மகாலட்சுமி தேர்வு செய்யப்பட்டார்.

இவர், வாடிப்பட்டி முன்னாள் ஒன்றியத் துணைத் தலைவர் ராஜேஷின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. திமுக சார்பில் பசும்பொன் மாறன் போட்டியிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்