இரண்டாம் நிலை காவலர் உள்ளிட்ட 8,888 பணிகளை நிரப்ப தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் மேற்கொண்ட அனைத்து தேர்வு நடவடிக்கை களையும் நிறுத்தி வைத்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய இரண் டாம் நிலை காவலர் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அன்பரசன் உள்ளிட்ட 15 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்து இருந்தனர்.
அதில், ‘‘காவல்துறையில் 2-ம்நிலை காவலர் மற்றும் சிறைத்துறை வார்டன்கள், தீயணைப்பு வீரர்கள் என மொத்தம் 8,888 பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் ஒரே பயிற்சி மையத்தில் படித்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 1,019 பேரும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 763 பேரும் தேர்வாகியுள்ளனர். இதில் முறைகேடு நடந்துள்ளது.எனவே, இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண் டும்" என அதில் கோரியிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், அனைத்து தேர்வு நடவடிக்கைகளையும் நிறுத்தி வைத்து, இதுதொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக உள்துறை செயலர் மற்றும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசா ரணைக்கு வந்தது.
அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ‘‘ஒரே தேர்வு மையத்தில் படித்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதும், எழுத்து தேர்வில் தோல்வியடைந்த 3 பேர் உடற்பயிற்சி தேர்வில் தேர்ச்சி பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளும் தவறானவை. இந்த வழக்கில் அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல்தேர்வு நடைமுறைகளை நிறுத்திவைத்து தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். எனவே அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’ என வாதிட்டார்.
அதையடுத்து நீதிபதிகள், ‘‘தேர்வு முறைகேடு தொடர்பான ஆவணங்களை ஆராயாமல் தேர்வு நடைமுறைகளை நிறுத்திவைத்து தனி நீதிபதி பிறப்பித்தஉத்தரவை ரத்து செய்கிறோம். எனவே, இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்டு இந்த வழக்கை விசாரிக்கவுள்ள தனி நீதிபதி, வழக்கை விரைவாக முடிக்க வேண்டும்’’ என உத்தர விட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
6 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago