உயர் நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக 3 பெண் நீதிபதிகள் அடங்கிய முழுஅமர்வு- இன்று விசாரணை மேற்கொள்கின்றனர்

By செய்திப்பிரிவு

உலக மகளிர் தினம் வரும் மார்ச் 8 அன்று கொண்டாடப்படவுள்ள நிலையில் உயர் நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக 3 பெண் நீதிபதிகள் கொண்ட முழு அமர்வு இன்று ஒரு வழக்கை விசாரிக்கவுள்ளனர்.

தொழிலாளர் அரசு காப்பீட்டுத் திட்டம், கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பொருந்துமா? என்பது தொடர்பான வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம் ஏற்கெனவே மாறுபட்ட தீர்ப்புகளை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பான வழக்கை முடிவுக்கு கொண்டு வர, சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக, முழுவதும் பெண் நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, அனிதா சுமந்த்மற்றும் பி.டி.ஆஷா ஆகியோர் இன்று (மார்ச் 4) காலை இதுதொடர்பான வழக்கை விசாரிக்கஉள்ளனர். உலக மகளிர் தினம்வரும் 8-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில் உயர் நீதிமன்றத்தில் 3 பெண் நீதிபதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து முழு அமர்வு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்