எதிரிகள் பொய் பிரச்சாரத்தை மேற்கொள்வதாகவும், அதனை முறியடிக்க வேண்டும் எனவும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை, ராயப்பேட்டையில் அதிமுக இலக்கிய அணி சார்பில், அக்கட்சி பேச்சாளர்களுக்கான 'சொல்வோம், வெல்வோம்' என்ற கருத்தரங்கு நடைபெற்றது. இதில், தமிழக முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
"பேச்சாற்றல் என்பது அதிமுகவுக்கு இதயம் போன்றது. பேச்சாற்றல் வலிமையாக இருந்தால் தான் அக்கட்சி வலிமை பெறும், ஆட்சி சிறக்கும். அரசின் திட்டங்கள், கட்சியின் கொள்கைகளை மக்களிடம் சென்று சேர்ப்பவர்கள் பேச்சாளர்கள். பேச்சாளர்கள் அரசின் திட்டங்களை தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும். கட்சியின் கொள்கைகளை முழுமையாக அறிந்து மேடைகளில் பேச வேண்டும். ஏனென்றால் வேண்டுமென்றே எதிர்க்கட்சியினர் அவதூறான பிரச்சாரத்தைப் பரப்பிக்கொண்டிருக்கின்றனர்.
இந்தியாவிலேயே திறன்மிக்க மாநிலம் என தமிழ்நாடு பெயர் பெற்றிருக்கிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா மறைந்தாலும் அவர்களின் கனவை அரசு நிறைவேற்றிக்கொண்டிருப்பதை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். மற்ற மாநிலங்களில் நடைமுறைப்படுத்தாத திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றுகிறது.
எதிரிகள் பொய் பிரச்சாரத்தை மேற்கொள்கின்றனர். பொய்யை திரும்பத் திரும்ப சொன்னால் மக்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படும். அதை முறியடிக்க வேண்டிய கடமை பேச்சாளர்களுக்கு இருக்கிறது. டெல்டா மாவட்ட மக்களின் உரிமைக் குரலை நிறைவேற்றிய அரசு இந்த அரசு. தமிழகத்தில் எந்த திட்டங்களும் நடைபெறவில்லை என்ற தவறான தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அதனை முறியடிக்க வேண்டும்"
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago