இந்திய ஆட்சிப்பணிக்கான மத்திய தேர்வு ஆணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுகள் 2020 ஆம் ஆண்டிற்கான முதல்நிலைத் தேர்வுக்கு (prelims exam) விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும்.
2020-ம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பு பிப்ரவரி 12 அன்று வெளியானது. மார்ச் 03 2020- (இன்று) மாலை 6 மணிக்குள் தேர்வர்கள் விண்ணப்பத்தை ஆன்லைனில் செலுத்தவேண்டும். இதற்கான தகுதியாக ஏதாவது ஒரு பட்டப்படிப்பு இருக்கவேண்டும். 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆன்லைனில் https://upsconline.nic.in என்ற பக்கத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். மொத்தம் 22 வகை ஆட்சிப் பணி படிப்புகளுக்கு இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.
» கேன் குடிநீர் உற்பத்தியாளர் 5-ம் நாளாக வேலைநிறுத்தம்- வழக்கு இன்று மீண்டும் விசாரணை
» துரைமுருகன் மகனுக்குச் சொந்தமான ‘அருவி’ குடிநீர் ஆலைக்கு சீல்
தமிழகத்தில் தேர்வு மையங்கள்:
முதல் நிலைத்தேர்வுக்கு தமிழகத்தில் சென்னை, வேலூர், மதுரை, கோவை, திருச்சி ஆகிய ஐந்து மையங்களும் புதுவையில் ஒரு மையமும் உண்டு (இதில் முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கு அவர்கள் கேட்கும் மையம் ஒதுக்கப்படும்).
i) Indian Administrative Service.(IAS)
(ii) Indian Foreign Service.(IFS)
(iii) Indian Police Service.(IPS)
(iv) Indian P & T Accounts & Finance Service, Group ‘A’.
(v) Indian Audit and Accounts Service, Group ‘A’.
(vi) Indian Revenue Service (Customs and Central Excise), Group ‘A’.
(vii) Indian Defence Accounts Service, Group ‘A’.
(viii) Indian Revenue Service (I.T.), Group ‘A’.
(ix) Indian Ordnance Factories Service, Group ‘A’ (Assistant Works Manager, Administration).
(x) Indian Postal Service, Group ‘A’.
(xi) Indian Civil Accounts Service, Group ‘A’.
(xii) Indian Railway Traffic Service, Group ‘A’.
(xiii) Indian Railway Accounts Service, Group 'A'.
(xiv) Indian Railway Personnel Service, Group ‘A’.
(xv) Post of Assistant Security Commissioner in Railway Protection Force, Group ‘A’
(xvi) Indian Defence Estates Service, Group ‘A’.
(xvii) Indian Information Service (Junior Grade), Group ‘A’.
(xviii) Indian Trade Service, Group 'A'.
(xix) Indian Corporate Law Service, Group ‘A’.
(xx) Armed Forces Headquarters Civil Service, Group ‘B’ (Section Officer’s Grade).
(xxi) Delhi, Andaman & Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Civil Service, Group 'B'.
(xxii) Delhi, Andaman & Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli
முதல்நிலைத் தேர்வு பாடத்திட்டம்:
யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வானது இரண்டு தாள் பொது அறிவு (general knowledge) மற்றும் ஆப்ஸ் என அழைக்கப்படும் சி சாட் பகுதியினைக் கொண்டது. காலையில் பொது அறிவுத் தாளானது 100 கேள்விகளுடன் ஒரு கேள்விக்கு 2 மதிபெண்கள் வீதம் மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் தவறான பதில்களுக்கு 2 மதிப்பெண்கள் குறைக்கப்படும். முதன்மைத் தேர்வில் பொது அறிவுத்தாளின் தேர்வு நேரம் காலை 10 மணிக்குத் தொடங்கி மதியம் 12 மணிக்கு முடியும்.
சிசாட் தாள் ஆப்ஸ் என அழைக்கப்படும் திறனாய்வு, லாஜிக்கல், ஆங்கிலம், காம்பிரிகென்சன், முடிவெடுக்கும் திறன் ஒருங்கே இணைந்து 100 கேள்விகளைக் கொண்டது, மொத்தம் 200 மதிப்பெண்கள் கொண்ட சிசாட் தாள் மதியம் 2 மணிக்குத் தொடங்கி 4 மணிக்கு முடியும். இதில் 33% சதவீதம் எடுத்தால் பாஸ். இதிலும் தவறான பதில்களுக்கு 2 மதிப்பெண்கள் குறைக்கப்படும்.
இன்று மாலை 6 மணிவரை ஆன்லைனில் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இன்றே கடைசி என்பதால் வாய்ப்பை தவறவிடவேண்டாம்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
19 hours ago