மாநிலங்களவைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் 3 பேரின் பட்டியலை கட்சியின்தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். திருச்சி சிவாவுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் (அதிமுக-4, திமுக-1, மார்க்சிஸ்ட்-1) பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த இடங்களுக்கு 6 புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 26-ம் தேதி நடக்கிறது.
இந்த தேர்தலில் அதிமுக, திமுகவுக்கு தலா 3 இடங்கள் இடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவைமுந்திக்கொண்டு திமுக தனது வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் "மார்ச் 26-ல் நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களாக திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் போட்டியிடுவார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி சிவா ஏற்கெனவே மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். அந்தியூர் செல்வராஜ் முன்னாள் அமைச்சராவார். என்.ஆர்.இளங்கோ, வழக்கறிஞர், கடந்த 2014-ம் ஆண்டு அரக்கோணம் மக்களவைத் தொகுதி தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். கடந்த ஆண்டு நடந்தமாநிலங்களவை தேர்தலில் மதிமுகபொதுச் செயலர் வைகோவுக்கு மாற்று வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago