அனுமதி இல்லாமல் பேனர்: மாவட்ட ஆட்சியர், காவல்துறை மீது வழக்கு தொடர்வேன்- டிராபிக் ராமசாமி பேட்டி

By இ.மணிகண்டன்

விருதுநகரில் தமிழக முதல்வர் பங்கேற்கும் விழாவையொட்டி அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை மீது வழக்கு தொடர உள்ளதாகவும் டிராபிக் ராமசாமி தெரிவித்தார்.

விருதுநகரில் அரசு மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழா இன்று மாலை நடைபெறுகிறது. இதில் தமிழக முதல்வர் பழனிசாமி கலந்துகொண்டு அரசு மருத்துவக்கல்லூரி கட்டுவதற்கான பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டுகிறார்.

அதையொட்டி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல்வர் விழா நடைபெறும் இடம் வரையிலான அணுகு சாலையில் முதல்வர் துணை முதல்வர் உள்ளிட்டோரின் கட் அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சட்டவிரோதமாக பேனர்கள் மற்றும் கட் அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக டிராபிக் ராமசாமி பார்வையிட்டு குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து டிராபிக் ராமசாமி அளித்தப் பேட்டியில், "சட்டத்தை மதிக்க வேண்டிய காவல்துறையினரே சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள பேனர் களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறார்கள்.

இது எந்த விதத்தில் நியாயம். சட்டவிரோதமாக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை மீது வழக்கு தொடர உள்ளேன்" எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE