தினமலர் நாளிதழின் பங்குதாரர் மறைந்த ஆர்.ராகவனின் மனைவி சுப்புலட்சுமி(77) நேற்று மாலை திருச்சியில் காலமானார்.
நாகர்கோவிலில் சுப்பிரமணி அய்யர், வேங்கடலட்சுமி தம்பதிக்கு1943-ல் பிறந்தவர் சுப்புலட்சுமி. தினமலர் பங்குதாரர் ஆர்.ராகவனை 1964-ல் மணந்தார்.
இவர்களுக்கு தினமலர் நாளிதழின் திருச்சி, வேலூர் பதிப்புகளின் ஆசிரியர் ஆர்.ராமசுப்பு, வெளியீட்டாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி ஆகிய இரு மகன்கள் உள்ளனர். திருச்சியில் வசித்து வந்த சுப்புலட்சுமி நேற்று மதியம் காலமானார்.
இறுதிச் சடங்குகள், இன்று (பிப்.28) பிற்பகல் 3 மணிக்கு திருச்சிகன்டோன்மென்ட் பேர்ட்ஸ் ரோடு இல்லத்தில் நடைபெறும்.
இறுதி ஊர்வலம் மதியம் 3.30 மணிக்குப் புறப்பட்டு, ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரை மயானத்தில் தகனக் கிரியைகள் நடைபெற உள்ளன.
முதல்வர் இரங்கல்
முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'தினமலர் நாளிதழின் பங்குதாரரான ராகவன் மனைவியும், அப்பத்திரிகையின் ஆசிரியர் ராமசுப்பு மற்றும் வெளியீட்டாளர் கோபால்ஜி ஆகியோரின் தாயாருமான சுப்புலட்சுமி அவர்கள், உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து வேதனை அடைந்தேன்.
சுப்புலட்சுமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தினமலர் குழுமத்துக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: ஆர்.சுப்புலட்சுமி மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டுமிகுந்த வேதனையுற்றேன். பத்தி
ரிகை சுதந்திரத்தை பாதுகாக்கும் மாபெரும் பணியில் ஈடுபட்டுள்ள தினமலர் பத்திரிகையின் வளர்ச்சிக்குத் துணை நின்ற ஆர்.சுப்பு
லட்சுமி அவர்களை இழந்து தவிக்கும் ராமசுப்பு, கோபால்ஜி ஆகியோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago