18 வயதுக்கு உட்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபடக் கூடாதா? - வழக்குத் தொடுத்தவரே விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

சிஏஏ போராட்டத்துக்குத் தடை கேட்டும், 18 வயதுக்கு உட்பட்டவர்களைப் போராட்டத்தில் ஈடுபடுத்துகிறார்கள் என்றும் தடை கேட்டு பொதுநல வழக்குத் தொடர்ந்தவர்களிடம் 18 வயதுக்குக் குறைவானவர்கள் போராட்டங்களில் கலந்து கொள்ளக்கூடாது என விதிகள் ஏதும் உள்ளதா என விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது முதல், அதை திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. பிப்ரவரி 14-ம் தேதி முதல் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் கட்சிகளின் கூட்டமைப்பினர் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

சேலத்தில் கோட்டை பகுதியில் உள்ள பால் தெருவில் ஒன்றுகூடிய கூட்டமைப்பினர் காவல்துறையிடம் அனுமதி பெறாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சேலம் மாநகர காவல் ஆணையரிடம் சேலம் சன்னியாசி குண்டு என்ற பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் பிப்ரவரி 17-ம் தேதி புகார் அளித்திருந்தார்.

அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் உடனடியாகச் சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுத்து, சேலத்தில் இயல்பு நிலை திரும்ப தமிழக அரசு, டிஜிபி, சேலம் காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்தார்.

அவரது மனுவில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், 18 வயது நிரம்பாத சிறுவர், சிறுமியரைப் போராட்டத்தில் ஈடுபடுத்தியுள்ளதாகவும், தெருக்கள் முதல் நெடுஞ்சாலைகள் வரை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகவும், அத்தியாவசிய மற்றும் அவசரகாலத் தேவைக்கான பொருட்கள் கிடைப்பதிலும் இடையூறு ஏற்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 18 வயதுக்குக் குறைவானவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது என்று கூறியுள்ள மனுதாரர் அதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை மார்ச் 2-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்