தனுஷ்கோடி அருகே இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த இலங்கை மீனவர்கள் 5 பேரை கடற்படையினர் கைது செய்தனர்.
தனுஷ்கோடி அரிச்சல்முனை அருகே வியாழக்கிழமை இந்திய கடற்படை ஹெலிகாப்டர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, இலங்கையைச் சேர்ந்த படகு ஒன்று சர்வதேச எல்லைப் பகுதியில் கடலில் நின்று கொண்டிருப்பதை ரோந்து அதிகாரிகள் கண்டனர்.
உடனே இந்திய கடற்படை வீரர்கள் ஹெலிகாப்டரை தாழ்வாக பறக்கவிட்டு படகையும் அதிலிருந்த 5 பேரையும் அரிச்சல்முனை கடல் பகுதிக்குக் கொண்டு வந்து மெரைன் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து மெரைன் போலீஸாரின் நடத்திய விசாரணையில், படகில் இருந்தவர்கள் இலங்கையில் உள்ள மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ், இயேசு ராஜா, உதயக்குமார், ரவீந்திரன், ரெக்சன் என்பது தெரியவந்தது.
காற்றின் திசையினால் இந்திய எல்லைப் பகுதிக்குள் திசை மாறி வந்ததாக அந்த மீனவர்கள் தெரிவித்தனர். படகை பறிமுதல் செய்த கடற்படையினர், அதிலிருந்த ஜிபிஎஸ் கருவி, மீன் வலைகள், மீனவர்களின் செல்போன்கள் உள்ளிட்டவற்றையும் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட 3 மீனவர்களும் விசாரணைக்குப் பிறகு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.
எஸ். முஹம்மது ராஃபி
முக்கிய செய்திகள்
தமிழகம்
41 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago