ஆண்டிபட்டி அருகே விவசாயக் கடனை திரும்பச் செலுத்த முடியாததால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை

By என்.கணேஷ்ராஜ்

ஆண்டிபட்டி அருகே ரூ.12 லட்சம் விவசாயக் கடனை திரும்பச் செலுத்த முடியாததால் விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, கடமலை - மயிலை ஒன்றியத்தில் உள்ள சிறப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மலிங்கம்(வயது52).

விவசாயியான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கம்பத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ரூ.12 லட்சம் விவசாய கடன் பெற்றிருந்தார்.

போதிய மழை இல்லாததால் விவசாயத்தில் நஷ்டம் ஏற்படவே, வங்கியில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. இதற்கிடையே வாங்கிய கடனை செலுத்தும்படி வங்கி சார்பில் தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு விவசாயக் கடனை செலுத்தாத தர்மலிங்கத்தின் வீட்டை ஜப்தி செய்யப் போவதாக வங்கி நோட்டீஸ் அனுப்பியது.

இதனையடுத்து மனமுடைந்த விவசாயி தர்மலிங்கம், பூச்சிமருந்தை குடித்து மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தர்மலிங்கம் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கடமலைக்குண்டு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விவசாயக் கடனைச் செலுத்த முடியாமல் விவசாயி பூச்சிமருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிறப்பாறை கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்