சொந்தக் காலில் நிற்கும் விவசா யிகளை ஒருபோதும் ஸ்டாலினால் வெல்ல முடியாது என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
தஞ்சாவூரில் நேற்று நடை பெற்ற அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங் களவை உறுப்பினருமான ஆர்.வைத்திலிங்கத்தின் மகன் வை.ஆனந்தபிரபு, ஓய்வுபெற்ற காவல் அதிகாரி தவமணிதேவரின் மகள் த.ஞானரூபிணி ஆகியோரது திருமண விழாவில் அவர் பேசிய தாவது:
வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும், அப்படி முதல்வராக இருக்கும் சந்தர்ப்பம் மக்களால் எனக்கு கிடைத்துள்ளது. ஆனால், ஸ்டாலினுக்கு விவசாயி என்றாலே என்ன எரிச்சல் என்று தெரியவில்லை. நான் விவசாயி என்று சொன்னால், நீ விவசாயி இல்லை என்று கூறுகிறார். விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்த நான் விவசாயி என்றுதானே சொல்ல வேண்டும். ஆனால், ஸ்டாலினுக்கு அது பிடிக்கவில்லை.
விவசாயி என்பது ஒரு பெருமை யான விஷயம், அடுத்தவரிடம் கையேந்தாதவர்கள் விவசாயிகள். மற்றவர்களெல்லாம் யாரேனும் ஒருவரைச் சார்ந்திருக்க வேண்டும்.
ஆனால், விவசாயிகள் மட்டும்தான் சொந்தக்காலில் நிற்பவர்கள். சொந்தக் காலில் நிற்கும் விவசாயிகளை எதிர்த்துப் போராடி ஸ்டாலினால் வெல்ல முடியாது.
இரவு- பகல், மழை- வெயில் என எதையும் பாராமல் உழைப்பவர்கள் விவசாயிகள். அவர்களை ஸ்டாலின் கொச்சைப்படுத்த வேண்டாம். பச்சைத் துண்டு போட்டவர்க ளெல்லாம் விவசாயி இல்லை என ஸ்டாலின் சொல்கிறார். பச்சைத் துண்டு போடுவதற்கும் விவசாயி என்கிற தகுதி வேண்டும் என்று பேசினார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசியபோது, “தஞ்சைத் தரணி மீது ஜெயலலிதா எவ் வளவு அன்பும் பாசமும் வைத்தி ருந்தார் என்பது இங்குள்ள விவசாயிகளுக்கு தெரியும். தஞ்சை மாவட்டம் ஒரு புண்ணிய பூமி, இதற்கு அச்சுறுத்தலாக ஹைட்ரோகார்பன் திட்டம் இருந் தது. மக்களின் பயத்தைப் போக்கவே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப் பட்டுள்ளது” என்றார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பேசியபோது, “டெல்டா மாவட்டப் பகுதிகளை பாதுகாக் கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்காக தமிழக முதல் வருக்கு விவசாயிகளின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒட்டுமொத்த டெல்டா மாவட்ட விவசாயிகளின் எண்ணங்களை பிரதிபலிக்கும் ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது. தமிழக வரலாற் றில் முதல் முறையாக ஒரு விவசாயி முதல்வராக பதவி ஏற்று வெற்றிகரமாக ஆட்சி நடத்தி வருகிறார். அவருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
முன்னதாக விழாவுக்கு வந்தவர்களை ஆர்.வைத்தி லிங்கம் வரவேற்றார். விழாவில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட் டையன், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், தங்கமணி, செல்லூர் ராஜூ, ராஜேந்திரபாலாஜி, சி.விஜயபாஸ்கர், ஆர்.துரைக் கண்ணு, ஓ.எஸ்.மணியன், ஆர்.காமராஜ், சரோஜா மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான்பாண்டியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், முன்னாள் அமைச் சர்கள், கூட்டணிக் கட்சியினர் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
26 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago