10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்: தேர்வுத்துறையின் 10 அறிவுறுத்தல்கள்

By செய்திப்பிரிவு

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு வர உள்ள நிலையில் தேர்வெழுதும் மாணவர்கள் ஸ்கெட்ச், வண்ண பென்சில்களைப் பயன்படுத்தக் கூடாது என அரசு தேர்வுத்துறை அறிவுரை வழங்கியுள்ளது.

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக மாணவர்கள் தீவிரமாகத் தயாராகி வருகின்றனர். தேர்வுத்துறையும் தேர்வுக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

இதுகுறித்து தேர்வுத்துறை விடுத்துள்ள அறிவிப்பு:

* தேர்வு எழுதும் மாணவர்களுக்கான முக்கிய அறிவுரைகள் போஸ்டராக பள்ளி வளாகத்தில் ஒட்டப்பட்டு இருக்கும். இதுமட்டுமின்றி தேர்வின்போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து அரசு தேர்வுத்துறை தேர்வு நுழைவுச் சீட்டில் (ஹால்டிக்கெட்) அறிவுரையாக அச்சிடப்பட்டுள்ளது.

* மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டில் அவர்களின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புகைப்படத்துடன் அச்சிடப்பட்டுள்ளது. அதில், பிறந்த தேதி, நிரந்தரப் பதிவெண், பதிவெண், தேர்வு மையத்தின் பெயர், முகவரி, மாணவர் பயின்ற பள்ளியின் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

* தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் காண்பித்தால் மட்டுமே, தேர்வர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படுவர்.

* செல்போன் அல்லது இதர தொலைத்தொடர்பு சாதனங்கள் வளாகத்துக்குள், தேர்வு அறையினுள் எடுத்து வர அனுமதி இல்லை.

* அனைத்து மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கும் பொதுத்தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் (சொல்வதை எழுதுபவர்கள், மொழிப்பாட சலுகை) உள்ளிட்ட அரசாணையின் விதிகளின்படி வழங்கப்படும்.

* தேர்வில் விடைத்தாளில் எக்காரணம் கொண்டும் ஸ்கெட்ச் பேனாக்கள், கலர் பென்சில்களை பயன்படுத்தக் கூடாது.

* தேர்வர்கள் விடைத்தாள் புத்தகத்தில் உள்ள பக்கங்களை எக்காரணம் கொண்டும் கிழிக்கவும் அல்லது தனியாகப் பிரித்து எடுத்துச் செல்லவும் கூடாது.

* தேர்வர்கள் துண்டுத்தாள் வைத்திருத்தல், பிற தேர்வரைப் பார்த்து எழுதுதல், விடைத்தாள்களை பரிமாறிக் கொள்ளுதல், ஆள்மாறாட்டம் செய்தல் கூடவே கூடாது.

* தமது விடைத்தாளில் தாம் எழுதிய அனைத்து விடைகளையும், தாமே கோடிட்டு அடித்தல் போன்ற ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடக் கூடாது.

* தேர்வர்கள் அவ்வாறான தவறான செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்”.

இவ்வாறு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்