சென்னை காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள அனைத்து குற்ற வழக்குகளையும் விரைந்து முடிக்க ஆணையர் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ளகுற்ற வழக்குகள் அனைத்தையும் விரைந்து முடிக்க காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு,செயின் பறிப்பு, ஆள் கடத்தல் உள்ளிட்ட அனைத்து வகையான குற்ற செயல்களையும் முற்றிலும் தடுக்க காவல் ஆணையர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி தற்போது துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள ரவுடிகள், தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, தற்போது சென்னையில் உள்ள 135 காவல் நிலையங்கள் மற்றும் 15 போக்குவரத்து புலனாய்வில் உள்ள அனைத்து குற்ற வழக்குகளையும் விரைந்து முடித்துசம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களுக்கும் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல் கூடுதல் காவல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி மேற்பார்வையில் இயங்கும் மத்திய குற்றப் பிரிவில் உள்ளவேலைவாய்ப்பு மோசடி, நம்பிக்கை மோசடி, பண மோசடி, நில மோசடி, வேலை வாங்கி தருவதாக மோசடி, வங்கி மோசடி உட்பட நிலுவையில் உள்ள அனைத்து குற்ற வழக்குகளையும் முடிக்க காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்