சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகிய சட்டங்களைக் கைவிட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கைவிட வேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து வலியுறுத்துகிறது. இதனை வலியுறுத்தி பல்வேறு கட்ட பொதுக்கூட்டங்கள், போராட்டங்களை அக்கட்சி நடத்தியது.
இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று (பிப்.22) திருச்சியில் 'தேசம் காப்போம்' பேரணி நடைபெற்றது. தேசிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும், இந்திய குடியுரிமைப் பதிவேடு சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் பேரணி திருச்சி எம்ஜிஆர் சிலையிலிருந்து உழவர் சந்தை வரை நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டார். அதன்பிறகு உழவர் சந்தையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தப் பேரணியின் இறுதியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
» பெட்ரோலிய முதலீட்டு மண்டலம்: அரசாணையை ரத்து செய்தது தமிழக அரசு
» சந்திரயான்-3 திட்டப் பணிகள் ஓராண்டில் முடிக்கப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்
1.குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறுக.
2. தேசிய மக்கள்தொகைப் பதிவேடு நடவடிக்கையைக் கைவிடுக.
3. தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை ரத்து செய்க.
4. இட ஒதுக்கீடு உரிமையைப் பாதுகாத்திடுக!
ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
.
முக்கிய செய்திகள்
தமிழகம்
27 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago