விஜய் மீது கே.எஸ்.அழகிரிக்கு ஏன் இந்த கோபம் என்று காங்கிரஸ் கட்சிக்கு சேருவது குறித்து கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டி குறித்து பொன் ராதாகிருஷ்ணன் கிண்டலடித்துள்ளார்.
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இதில் பேசிய அழகிரில் நடைகர் விஜய் குறித்து பேசினார். அதில் விஜய் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு ரஜினிக்கு வருமான வரிச்சலுகை குறித்து பேசிய அழகிரி விஜய்க்கு ஆதரவாக பேசினார்.
கே.எஸ்.அழகிரி பேட்டியில், நடிகர் ரஜினிகாந்துக்கு ரூ.64 லட்சம் கட்டினால் மேல்முறையீடு செய்யமாட்டோம் என்று தெரிவித்த வருமான வரித்துறையினர் நடிகர் விஜய்க்கு 24 மணிநேர கால அவகாசம் கூட வழங்கவில்லை. விஜய் காங்கிரஸ் கட்சியில் சேருவது பற்றி பேசப்பட்டதே தவிர அழைக்கப்படவில்லை. அவர் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் மனதார ஏற்றுக்கொள்வோம்”. என்று தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கிண்டலடித்துள்ளார்.
தூத்துக்குடியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட பொன் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மக்கள் தூண்டப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.இந்த பிரச்சினைக்கு தி.மு.க.வும், காங்கிரஸ் கட்சியும்தான் 100 சதவீதம் காரணம்.
நாடு விடுதலை பெற்றபோது, இந்த நாட்டில்தான் இருப்பேன் என்று இந்த மண்ணிலேயே வாழ்ந்து வரும் இஸ்லாமியர்கள் மற்றும் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், இந்த மண்ணை விட்டு அகற்றுவதற்கு பிரதமர் மோடி அரசு தயாராக இல்லை.
ஆர்.எஸ்.பாரதி பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசி உள்ளார். இது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தூண்டுதலின் பேரில் நடந்த நிகழ்ச்சி ஆகும். அதற்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில் ஆர்.எஸ்.பாரதி வருத்தம் தெரிவிப்பதை ஏற்க முடியாது.
இதற்கு திமுக. தலைவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பேசிய அவர் அழகிரி நடிகர் விஜய்யை காங்கிரஸுக்கு அழைத்தது குறித்து பதிலளித்தார்.
நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் சேர்த்துக்கொள்வோம் என்று அந்த கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார். அவருக்கு நடிகர் விஜய் மீது ஏதோ கோபம் இருக்கிறது என்று நினைக்கிறேன். நடிகர் விஜய்யை தற்கொலைக்கு சமமான விஷயத்தை செய்ய அழகிரி தூண்டுகிறார்.
எனக்கிண்டலடித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
10 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago